October 16, 2021

காணாமல் போன ஃபிளைட்டை கண்டு பிடிக்க ரிலையன்ஸ் உதவி – நேவி தகவல்

கடந்த வெள்ளிக்கிழமை காலை ஏ.என்.32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் அது சென்னைக்கு அருகே திடீரென மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுவதால் கடந்த 4 நாட்களாக அந்த விமானத்தை தேடும்பணி நடந்து வருகிறது.

flight jy 26

இதுகுறித்து இந்திய கடலோர காவல்படையின் தென்மண்டல ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் இன்று(நேற்று) 4-ம் நாளாகும். தேடும் பணியை விமானப்படை, கப்பல் படை, கடலோர காவல்படை ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன.இந்த தேடுதல் பணிக்கு இஸ்ரோ நிறுவனம், என்.ஐ.ஓ.டி. உள்பட பல நிறுவனங்களின் உதவியை நாடியிருக்கிறோம். தேடுதல் பணியின்போது பெரிய அளவில் மோசமான வானிலை உருவாகவில்லை. எனவே அந்தப் பணியில் எந்தவித குறைபாடும் நேரவில்லை. ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் இ.எல்.டி. (எமர்ஜென்சி லொக்கேட்டர் டிரான்ஸ்மிட்டர்) என்ற கருவியில் இருந்து கிடைக்க வேண்டிய சிக்னல் கிடைக்கவில்லை. அதுகிடைத்தால் மட்டுமே எங்களின் தேடும் பணி எளிதாகும்.

கடந்த சில விமானம் காணாமல் போன சம்பவங்களில்கூட இ.எல்.டி. கருவி வேலை செய்யவில்லை. இது கவலையளிக்கும் விஷயம். இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்களில் இ.எல்.டி. செயல்படாமல் போனது உண்மைதான். இதிலுள்ள குறைபாடு அதன் தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
கடல் மட்டத்தில் இருந்து யாரையும் அல்லது விமானத்தின் பாகங்களையும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டால், அடுத்ததாக கடலுக்கு அடியில் சென்று தேடும் பணியை தொடர வேண்டும். இதற்காக நீர்மூழ்கிக் கப்பலை, கப்பல் படை அங்கு நிறுத்தி இருக்கிறது. அது 26-ந் தேதியில் இருந்து இன்று பணியைத் தொடங்கும். எங்களுடன் பணியாற்றிய முத்துக்கிருஷ்ணன் என்பவர் மாயமான அந்த விமானத்தில் இருந்திருக்கிறார். மற்ற நபர்களின் பட்டியலை விமானப் படைதான் வெளியிட வேண்டும்.

இந்த தேடுதல் பணிக்கும், விமானம் விழுந்த இடத்தை நிர்ணயிக்கும் பணிக்கும் காலக்கெடு வைக்கப்படவில்லை. நீண்ட தேடலுக்கு தயாராக இருக்கிறோம். கடந்த முறை டோர்னியர் விமானம் விழுந்தபோது, சிக்னலை அறிவதற்காக ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலின் உதவியை நாடினோம். இப்போதும் தனியார் நிறுவன உதவிகளை கண்டிப்பாக நாடுவோம். ஆனால் இதுவரை அழைக்கவில்லை. தற்போது அந்தக் கப்பல் நார்வேயில் இருக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.