February 7, 2023

பரத் நடிப்பில் உருவான ‘மிரள்’ டீசல் வைரலாகிப் போச்சு!

ரத் மற்றும் வாணி போஜனின் மிரல் படம். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா இந்துமணி ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் G டில்லி பாபு. அவரது தயாரிப்பில் வெளியான ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் என பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது ‘மிரள்’ என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது. எம்.சக்திவேல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிரசாத் இசையமைத்துள்ளார். சுரேஷ்பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் எம்.சக்திவேல் ” பரத் மற்றும் வாணி போஜனும் கணவன்-மனைவி, இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சென்னையில் வசிக்கும் இவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதனால் தென்காசி குல தெய்வ கோவிலில் பூஜை செய்வதற்காக வருகின்றனர். பூஜை முடிந்து அந்த பகுதியில் உள்ள கல்லா காற்றாலை வழியாக இரவில் திரும்புகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் சிலிர்ப்பான அனுபவங்கள், அதிலிருந்து அவர்கள் எப்படி வெளிவருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. காற்றாலை பின்னணியில் இதுவரை எந்த படமும் வரவில்லை. கடந்த 24ம் தேதி வரை காற்றாலை பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. 150 அடி உயரத்தில் காற்றாலை அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். வித்தியாசமான திரில்லர் அனுபவமாக இப்படம் இருக்கும்” என்று கூறினார்.

மேலும் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த டீசரில் நடிகர் பரத் தனது மனைவியான வாணிபோஜனையும், மகனையும் அழைத்து சொந்த ஊரில் குடியிருக்கும் அப்பா வீட்டிற்கு செல்கின்றனர். அப்போது முகமூடி அணிந்த ஒரு உருவம் அவர்களை பயமுறுத்துகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மீண்டார்களா இல்லையா அது தான் படத்தின் கதை.., தற்போது இந்த டீசர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.