December 2, 2021

‘ஆள் கடத்தல் (தடுப்பு, பராமரிப்பு & மறுவாழ்வு) மசோதா 2021’ குறித்த கருத்துகள் வரவேற்பு!

ள் கடத்தல் (தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா 2021’ குறித்து பங்குதாரர்கள் அனைவரின் கருத்துக்களையும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்றுள்ளது. ஆள் கடத்தல் என்பது மனித உரிமைகளை மீறும் சம்பவங்களில் உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய குற்றமாகும். இந்தக் குற்றத்தைக் கையாண்டு தடுக்க உரிய சட்டம் இதுவரை இல்லை. அதனால், ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) சட்ட முன்வடிவு (2018) கொண்டுவரப்படுகிறது. இந்த சட்டமுன்வடிவு மிகவும் பரவலாகவும், கண்ணுக்குத் தெரியாமலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் நடக்கும் ஆள் கடத்தல், குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் கடத்தும் குற்றத்தைத் தடுக்கப் பெரிதும் வகை செய்யும்.

இந்தச் சட்டம் கொண்வரப்படும்போது, தெற்காசிய நாடுகளிலேயே இந்தியா ஆள்கடத்தலைத் தடுப்பதில் தலைமைப் பண்பு கொண்ட நாடாகத் திகழும். ஆள் கடத்தல் உலகுக்கே கவலை தருவதாகும். அதிலும் தெற்காசிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அவற்றில், தற்போது இந்தியா ஒருங்கிணைந்த சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் முன்னோடியாகத் திகழ்கிறது.

இந்தச் சட்டத்தை இந்தியா செயல்படுத்துவதை ஐநா போதைப் பொருள் கடத்தல் குற்றத் தடுப்பு அலுவலகம் (UNODC), தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பு (SAARC) ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.

இந்த சட்ட முன்வடிவு பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பல்வேறு வல்லுநர்களைக் கலந்தாலோசித்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மகளிர், இது தொடர்பாக குழந்தைகள் நல அமைச்சகத்துக்கு ஏராளமான ஆலோசனைகள் வரப்பெற்றன. அவையெல்லாம் இந்த சட்டமுன்வடிவில் சேர்க்கப்பட்டுள்ளன. வரைவு மசோதா தில்லி, கோல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 60 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்பட பல தரப்பினருடன் கலந்து ஆலோசித்த பிறகு வரைவு மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. பல அமைச்சர்களிடையில் இந்த மசோதா குறித்து ஆய்வு நடத்தியும் விவாதிக்கப்பட்டது.

அந்த வகையில் தனி நபர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கு மரியாதை வழங்கி, அவர்களுக்கு பாதுகாப்பு, ஆதரவு மற்றும் மறுவாழ்வு அளித்து, ஆதரவான சட்ட, பொருளாதார மற்றும் சமூக சூழலியலை அவர்களுக்கு உருவாக்குவதுடன், குற்றவாளிகள் மீது வழக்கு தொடுப்பதை உறுதி செய்வது இந்த மசோதாவின் நோக்கமாகும். இந்த மசோதா இறுதி செய்யப்பட்ட பிறகு, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதைத்தொடர்ந்து சட்டமாக இயற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலை பெறுவதற்காக அனுப்பப்படும். எல்லை தாண்டிய செயல்கள் அடங்கிய ஆள்கடத்தல் தொடர்பான ஒவ்வொரு குற்றத்திற்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.

14.07.2021 ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மசோதா குறித்த கருத்துக்களை அனுப்பலாம்.

வரைவு மசோதாவைக் காண: இங்கே க்ளிக் செய்யவும்