போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது கிரிமினல் நடவடிக்கை – மத்திய செய்தி & ஒளிபரப்பு துறை அமைச்சகம் எச்சரிக்கை

போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது கிரிமினல் நடவடிக்கை –  மத்திய செய்தி & ஒளிபரப்பு துறை அமைச்சகம் எச்சரிக்கை

க்களிடையே உண்மைக்கு புறம்பான வதந்திகளை பரப்புவதில் சமூக வலைதளங்கள் முன்னலை வகிக்கின்றன. இதனால் பல சர்ச்சைகளும், வன்முறைகளும் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்தியஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே போலியான, தவறான செய்திகள் வெளியிடும் இணையதளங்கள், சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் போன்றவை முடக்கப்பட்டு வருகின்றன.

யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் தவறான தகவல்கள் மற்றும் செய்திகளால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. சமூக வலைதளங்களில் பலர் தனியாக யூடியூப் சேனல்கள் தொடங்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டை சீர்குலைக்கும் வகையிலும் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருவதால் தேவையில்லான பிரச்சினைகள் உண்டாகிறாது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் 100-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டன. இதில் பெரும்பாலான யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டது ஆகும். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

இந்தநிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்களை முடக்கி தன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

error: Content is protected !!