முப்படைகளின் தலைமைத் தளபதி, அவரது மனைவி உள்ளிட்டோர் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு!

முப்படைகளின் தலைமைத் தளபதி, அவரது மனைவி உள்ளிட்டோர் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு!

முப்படைத்தலைவர் நிவின் ரவாத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் மலையில் மோதி எழுந்தது. விழுந்த இடத்தில் உடனே தீ பற்றிக்கொண்டது. ஹெலிகாப்டரில் இருந்த பிவின் ரவாத் அவரது துணைவியார் மற்றும் 12 அதிகாரிகள் உடல் கருகி இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊட்டி வெலிங்டனில் ராணுவ கல்லூரி ஒன்று உள்ளது. ராணுவக் கல்லூரிக்கு பிவின் ரவாத் தலைமையில் ராணுவ அதிகாரிகள் குழு ஒன்று இன்று ஹெலிகாப்டரில்சென்றது. கோவை, சூலூரில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் சிறிது நேரம் கழித்து வெலிங்டன் புறப்பட்டது. குன்னூர் மலை அருகே ஹெலிகாப்டர் செல்லும்பொழுது மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதியதாக கூறப்படுகிறது. மலையில் உள்ள மரத்தில் மோதிய ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது.ஹெலிகாப்டர் தரையில் விழுந்த இடத்தில் உடனே தீப்பற்றி கொண்டது. ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்த இடத்துக்கு மீட்புப் படை விரைந்து சென்றது.

விபத்துக்குள்ளான எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர் குறைந்த தொலைவில் வீரர்களையும் ஆயுதங்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகிறது. இதில் 36 பேர் வரை பயணிக்கலாம். ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் 4 டன் எடை வரையிலான சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாகும். இந்த எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர் மணிக்கு 260 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காகவும் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டரில் இருந்த முப்படைத்தலைவர் பிவின் ரவாத் மற்றும் அவரது துணைவியார்  ஆகியோர் மரணமடைந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். அவர் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார். மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராக அவர் பணியாற்றினார்.

ராணுவ செயலர் பிரிவில், துணை ராணுவ செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் ராணுவ செயலாளராக பிபின் ராவத் பணியாற்றினார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார். அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கெடுத்துள்ளார். ஜெனரல் பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப்பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார்.

error: Content is protected !!