March 31, 2023

மேயாத மான் – தமிழ் திரையுலகிற்கு இது ஒரு விஷ வித்து! – திரை விமர்சனம்!

தமிழகத்தில், 1980ல், ஒரு லட்சம் பேருக்கு 10 பேராக இருந்த தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை, தற்போது, 25.6 பேராக உயர்ந்துள்ளதாம். நம் தமிழகத்தைப் பொறுத்த வரை, 15 – 29 வயது வரை உள்ளோர் அதிகள வில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்வோரில் பெண்களை விட ஆண்களே அதிகம். இதற்கு முக்கிய காரணங்களில் தலையாயது காதல் குழப்பம்தான் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. பிற நகரங்களை காட்டிலும் சென்னையில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகம் என்ற கவலை தரும் நிஜ புள்ளி விவரங்களை அதிகரிக்கும் நோக்கில் தயாராகி வெளியாகி உள்ள படம் மேயாத மான் ஒரு விஷ வித்து என்றுதான் சொல்ல வேண்டும். அத்துடன் ரத்தின குமார் இயக்கிய ‘மது’ என்கிற குறும்படத்தைத்தான் தற்போது கார்த்திக் சுப்புராஜ் ‘மேயாத மான்’ என்ற தலைப்பில் திரைப்படமாக தந்து தனக்கான தனி பெருமையை வெளிக்காட்டி இருக்கிறார் .

ஆரம்ப காட்சியியே ஒரு குடிகாரன் ஷேக்ஸ்பியர் கொட்டேஷனை உளறு வாய்சில்தான் சொல்வது போல்தான் தொடங்குகிறது. அதாவது ஹீரோயின் பிரியா பவானி சங்கர். இவரை காலேஜூல் ஒன்சைடாக மூன்று ஆண்டுகள் காதலிக்கும் நாயகன் வைபவ். இவர் தன் காதலை வெளிப்படுத்தாமல் இதயம் முரளி- பாணியில் இருந்து விட்ட நிலையில், பிரியா பவானிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தும் விடுகிறது. இதை தெரிந்து நாயகன் தன் காதல் நிறைவேறாததால் தற்கொலை செய்துக்கப் போறேன் என்று தன் நண்பர்களிடம் போனில் சொல்லி நேரம் கடத்துகிறார். உடனே அவரை காப்பாற்றுவதற்காக பிரியாவை தேடி நாடும் அவன் நண்பர்கள் முயற்சியால் சூசைட் முயற்சி நிறுத்தப்படுகிறது. கூடவே நாயகன் லவ் பற்றி புரிந்து கொண்ட ஹீரோயின் பிரியா பவானி சங்கர் தன் திருமணத்தை தள்ளி வைத்து, வைபவ்-வுடன் பழகி, நெருங்கி அப்புறம் செய்ய கூடாததை செய்த அதன் பிறகும் தவறான முடிவை எடுத்துள்ளதை இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தமான பல்வேறு அம்சங்களுடன் சொல்லி இருக்கிறார்கள்.

உள்ளங்கையில் அடங்கி விட்ட நவீனமயமாகி விட்ட இந்த காலத்தில் அறிவைத் தேடி பள்ளி கல்லூரிக்கும் – வாழத் தேவையான பணத்தினைத் தேடி பணிச்சுமையை சுமந்துக் கொண்டு அலுவலகங்களுக்கும் ஓடும் பலரின் மனதிற்கும் இதம் தரும் ஒரே விஷயம் இந்த காதலாகத்தான் இருக்கும். காதல் ஒரு நிம்மதி. கொஞ்சம் புரியும் படி சொல்வதென்றால் நம் மனத்துக்கு விஷேச குண்மொன்று உண்டு. அதாவது நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை விட, இல்லாதது என்ன என்பதைத் தேடுவதே மனத்துக்கு முக்கியமாக இருக்கிறது. ஆம்.. இருப்பதைக் கொண்டாடி மகிழ்வதை விட, இல்லாததை நினைத்து நினைத்து ஏங்குவது மனதுக்குப் பிடித்தமானதாக இருப்பதாலேயே காதல் சாகா வரம் பெற்ற வரமாக இருக்கிறது. அந்த காதல் போக்கு சரியான வழிகாட்டல்கள் பலவற்றை நம் தமிழ் இயக்கு நர்கள் (கூட) சிறப்பாக கொடுத்து வரும் சூழ்நிலையில் காதல் ஒன்று சேர படுக்கை அறையில் ஒன்று சேருவதே வழி என்பதையும் , காதல் கை கூட வில்லை என்றால் தற்கொலைதான் தீர்வு என்றும் இப்போதைய யங்க்ஸ்டர்களுக்கு அவர்களுக்கு பிடித்த பாணியில் சொல்ல முயன்றிருக்கும் இந்த இயக்குநரையும், தயாரிப்பா ளரையும் எவ்வளவு கெட்ட வார்த்தைகளாலும் திட்டி தீர்க்கலாம். படம் நெடுக்க நாயகன் போதையில் மிதந்த படி பினாத்திக் கொண்டிருக்கிறான் – இந்த டாஸ்மாக்-க்கு பிறந்தவன் போலிருக்குது.

நாயகி சின்னதிரையிலிருந்து வந்தவர். நேரிலோ, டிவியிலோ பார்த்தை விட அழகு குறைச்சலாய் அந்த பொண்ணை காட்டி இருக்கிறார்கள். மேலும் பெரும்பாலும் உம்மானாமுஞ்சிதனமான ரோலில் பயணித்துக் கொண்டிருந்தவர் தன்னுடன் உறவு வைத்து கொள்ள வற்புறுத்தும் போக்குக்கெல்லாம் இவர் சரி பட்டு வரவில்லை! அதே சமயம் ஹீரோவின் உயிர் நண்பனாக வரும் விவேக் பிரசன்னா இப்படம் முழுக்க பரவி தன் தனி திறமையை நிரூபித்து இருக்கிறார். தங்க ரோலில் வரும் இந்துஜாவும் கொஞ்சம் டி.வி.தனமாக ஓவராக இருந்தாலும் மனதில் நிற்கும் படி நடித்து இருக்கிறார்.

இளம்ரசிகர்களை கவரும் என்று கணக்கு போட்டு பல அட்ராக்டிவ் வசனங்களை ஆங்காங்கே தெளித்து அவ்வப்போது அப்ளாஸ் அள்ளுகிறார்கள்தான். ஆனால் இது போன்ற சினிமாக்கள் மூலம் இளையதலைமுறைக்கு தவறான சேதிகளே போய் சேரும் என்பதை உணராமல் மேயாத மான் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த படம் கமர்ஷியலாக ஹிட் அடிப்பது என்பது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்பதை விரைவில் புரிந்து கொள்ளதான் போகிறோம்

மார்க் 5 / 2