Exclusive

மேதகு 2 – விமர்சனம்!

மேதகு திரைக்களம் தயாரிப்பில் இரா. கோ. யோகேந்திரனின் ஆக்கம் மற்றும் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மேதகு 2.

பிரபாகரனின் ஆரம்ப கால வரலாற்றைப் பதிவு செய்யும் விதமாக வந்த மேதகு பாகம் ஒன்றை கிட்டு இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு ஜூன் 25 அன்று பாகம் ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது .இதன் தொடர்ச்சியாக இப்போது மேதகு 2 வெளியாகி இருக்கிறது. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் தமிழக தலைவர்களின் உதவியும் இந்திரா காந்தியிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. பாவலரேறு பெருஞ்சித்திரனார் , பழ . நெடுமாறன் , புதுக்கோட்டை பாவண்ணன், வைகோ ஆகியோர் புலிகள் இயக்கத்துக்கு அளித்த ஆதரவும் எம் ஜி ஆர் கோடிகளை அள்ளிக் கொடுத்த விதமும் சொல்லப்படுகிறது. மூன்றாம் பாகம் வரும் என்ற அறிவிப்போடு இந்த மேதகு 2 படம் முடிகிறது.

கதையின் நாயகனாக பிரபாகரன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள கெளரிசங்கர், கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பதோடு அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நாசரின் மெளனம் பல கேள்விகளை நம் மனதில் எழுப்புவதோடு, விடுதலைப் புலிகள் அமைப்பின் அமைதிக்கு பின்னணியில் மிகப்பெரிய சூறாவளி இருப்பதையும் உணர்த்துகிறது.

ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன் இயல்பான ஒளிப்பதிவு கதையை தொந்தரவு செய்யாமல் பயணிக்கிறது. தமிழர்களின் போராட்டத்தின் வீரியத்தையும், தமிழர்களின் வலியையும் படம் பார்ப்பவர்கள் உணரும் வகையில் பிரவின் குமாரின் பின்னணி இசை பயணிக்கிறது.

இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமையை மீட்பதற்காக உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சி, கட்டமைப்பு, ஆயுத பலம், அவர்களின் தாக்குதல் மற்றும் உலக நாடுகளின் அரசியல் தந்திரங்களை முறியடித்தல் என பல வரலாற்று சம்பவங்களை காட்சிகள் மூலம் நம் கண் முன் நிறுத்திய இயக்குநரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதே சமயம், சர்வதேச அளவில் புகழ் பெற்ற பிரபாகரன் மற்றும் அவர் தொடர்பான அரசியல் நிகழ்வுகளை  மிக சாதாரணமான முறையில் படமாக்கியிருப்பது மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.

ஒவ்வொரு சம்பவங்களின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் மறைந்திருப்பதை இயக்குநர் மற்றும் கதை எழுதிய குழுவினர் இன்னும் விரிவாகவும், வீரியமாகவும் காட்டியிருந்தால் ‘மேதகு 2’ பல உயரங்களை தொட்டிருக்கும்.

மேதகு 2 பார்க்க வேண்டிய படம்.

இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளிலும் tamils OTT என்கிற புதிய ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியாகி உள்ளது.

aanthai

Recent Posts

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பு : இந்தியா, சீனா புறக்கணிப்பு!

உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா புறக்கணித்துள்ளது.…

56 mins ago

பொன்னியின் செல்வன் – விமர்சனம்!

முன்னொரு காலக்கட்டத்தில் - அதாவது ஊமைப் படங்கள் உருவான காலத்திலும் சரி, பேசும் படமாக அது வளர்ச்சி அடைந்த சூழலிலும்…

1 day ago

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி : வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும்!

கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரெப்போ விகிதம்…

1 day ago

சமந்தா & தேவ் மோகன் நடிப்பில் தயாரான ‘ஷாகுந்தலம்’, 3 டி – யில் ரிலீஸ்!

உலகப்புகழ் பெற்ற காளிதாசின்  'அபிஞான ஷாகுந்தலம்' எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி எடுக்கப்படும்  'ஷாகுந்தலம்' மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 days ago

“’ஆதார்’ படத்தின் உள்ளடக்கம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படக்கூடியத் தகுதி கொண்டது!

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி…

2 days ago

This website uses cookies.