பழைய கார், பிரிட்ஜ் விற்க நாடு முழுவதும் மையங்கள் – மத்திய அரசு பிளான்!

பழைய கார், பிரிட்ஜ் விற்க நாடு முழுவதும் மையங்கள் – மத்திய அரசு  பிளான்!

நம் நாட்டில், 2018-ஆம் ஆண்டில், 30 லட்சம் டன் மின்னணு கழிவுகள் உருவாகும். தற்போது இந்தியா ஆண்டுக்கு 18.5 லட்சம் டன் மின்னணு கழிவுகளை உருவாக்கி வருகிறது. எட்டு பெரிய நகரங்களில் மும்பையில் மின்னணு கழிவுகள் அதிகமாக உள்ளது. அங்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.20 லட்சம் டன் கழிவுகள் உருவாகிறது. அடுத்து டெல்லி – என்.சி.ஆர். பகுதி 98 ஆயிரம் டன், பெங்களூரு 92 ஆயிரம் டன் கழிவுகளை வெளியிடுகின்றன. சென்னை (67,000 டன்), கொல்கத்தா (55,000 டன்), அகமதாபாத் (36,000 டன்), ஐதராபாத் (32,000 டன்) மற்றும் பூனா (26,000 டன்) ஆகிய நகரங்களும் மின்னணு கழிவுகளை குவிக்கின்றன.

old sale apr 17

இந்தியாவில் உருவாகும் மொத்த மின்னணு கழிவுகளில் 2.5 சதவீதம் மட்டுமே நாட்டில் உள்ள குறைந்தபட்ச தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ள கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களின் உடல் நலம் கெடுகிறது. 95 சதவீதத்திற்கும் மேலான மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு பதிலாக, அவற்றை பிரித்து கையாளும் பணிகளில் பல்வேறு அமைப்பு சாரா நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் சிறார்களே பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து நம் நாட்டில் போதிய அளவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுகள் இல்லை.

மின்னணு கழிவுகளில் கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரிபாகங்களின் பங்கு அதிகபட்சமாக 70 சதவீத அளவிற்கு உள்ளது. அடுத்து, தொலைத்தொடர்பு சாதனங்கள் (12 சதவீதம்), மின்சார உபகரணங்கள் (8 சதவீதம்) மற்றும் மருத்துவ கருவிகள் (7 சதவீதம்) இருக்கின்றன. இவை தவிர, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் பங்கு 4 சதவீதமாக உள்ளது.

இநிலையில் பழைய கார், பிரிட்ஜ், வாஷிங் மிஷின்களை நல்ல விலைக்கு விற்க நாடு முழுவதும் மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் விஜய் குமார் சரஸ்வத் தெரிவித்துள்ளார். மத்திய உருக்கு துறை மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து உலோக மறுசுழற்சி கொள்கையை வரையறுத்து வரு கின்றன. இந்த புதிய கொள்கை இன்னும் 6 மாதங்களில் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

இதுதொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் விஜய் குமார் சரஸ்வத், “பழைய கார், பிரிட்ஜ், வாஷிங் மிஷின் ஆகியவற்றை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உலோக மறுசுழற்சி கொள்கை வரையறுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்படும். அங்கு நல்ல விலைக்கு பழைய கார், பிரிட்ஜ் உள்ளிட்டவற்றை விற்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய டீசல் கார் களுக்கு தேசிய பசுமைத் தீர்ப் பாயம் தடை விதித்துள்ளது. மேலும் பி.எஸ். 3 ரக கார்கள், இருசக்கர வாகனங்களை விற்க, பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது.
இந்தப் பின்னணியில் உலோக மறுசுழற்சி கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!