பலரையும் + பலதையும் குத்திக் கிழித்தபடி திரைக்கு வந்து விட்ட முரட்டுக் காளை ‘மெரினா புரட்சி!

மெரினா புரட்சி திரைப்படம் இன்று வெள்ளித் திரையில் வந்தே விட்டது…! இது உண்மையில் எட்டாம் தமிழக அதிசயம் என்று சொன்னால் மிச்ச ஏழு அதிசயங்கள் என்ன கேட்டு டேக் டைவர்சன் செய்ய வேண்டாம்.. அந்த ஏழு அல்ல.  ஏழரை அதிசயங்கள் குறித்து அவ்வப்போது சொல்கிறேன்..

இப்போது உரத்த குரலில் சொல்ல வேண்டியது – ஏகப்பட்ட வெட்டுக் காயங்களோடு திமிறி சீறிக் கொண்டு வந்தே விட்டது ‘மெரினா புரட்சி’ என்னும் ஜல்லிக்கட்டு காளை. அடங்காத் திமிருடன். அதே கம்பீரத்தோடு…!

முதலில், இது திரைக்கு வருமா என்ற சந்தேகம் அதிகமிருந்தது. அதற்கான காரணங்களும் அந்த திரைப்படமே உணர்த்தியிருந்தது.

ஜல்லிக்கட்டு தடைக்கெதிரான போராட்டம் வெடித்த ஓரிரு நாள்வரை இந்த அரசு மௌனமாகவே இருந்தது. அது ஏன்?, எதற்காக? அந்த நேரத்தில் ‘எடப்பாடி- பன்னீர் மோதல்- தீபா எண்ட்ரி’ என்ற பரபரப்பு அரசியலை மடைமாற்றத்தான் அப்படி செய்தார்கள் என்பதை ‘அம்பலப்படத்திய’ விதம் சற்று மிரட்சியானது. அதுவே படத்தை முடக்குவார்கள் என்ற அச்சத்தை-சந்தேகத்தை உருவாக்கியிருந்தது.

அடுத்து, அந்த ‘பீட்டா’ அமைப்பு, அதன் உள்ளேயும் வெளியேயும் பின்னியுள்ள ரகசிய தொடர்புகள்! அது, தமிழர்களின் பாரம்பரிய ஒரு விளையாட்டை முடக்க நினைப்பது ஏன்?! அதைத் சுற்றிய சதிகள் என்ன என்பதை, ‘துனிச்சலான புலனாய்வு’ ஆதாரத்தோடு திரையில் காட்டிய போக்கு, நம்மை சில்லிட வைத்தது.

இவ்வளவு ‘பின்னணிகளா’? இப்படியான ‘மேலிடங்களா’ என்ற அதிர்ச்சி ஒரு புறம். இதை எப்படி இயக்குனர் சொல்லத் துணிந்தார் என்ற பிரமிப்பு மறுபுறம். இதை எப்படி திரைக்கு விடுவார்கள் என்ற சந்தேகம் நீடித்தபடி இருந்தது.

அடுத்து மெரீனா போராட்டம் தொடங்கியது முதல் கடைசிவரை, ‘மைக் ராஜக்களாக’ இருந்த முக்கிய நபர்கள், கலவரத்தின் போது, போலீஸ் தடியடியின் போது, விரட்டி விரட்டிச் சென்று தாக்கிய போது, ‘எங்கே தலைமறைவானார்கள்’?! அது ஏன், எதற்காக என்ற ‘ரகசியத்தை உடைத்த’ இடம் இருக்கின்றதே, அதுவும் படத்தை முடக்கிப்போடும் சக்கிதான்.

உச்சகட்டமாக, உச்சநீதிமன்ற நீதிபதியையும் தொட்டு, சந்திக்கு இழுத்துவந்து நிறுத்திய இடம்…மாஸ்ட்டர் அட்டாக்…எக்ஸலண்ட்!

இப்படி, இந்த திரைப்படத்திற்காக அலைச்சல், மன உலைச்சல், ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றத்தை நாடி, தகுந்த ஆதாரங்களை- ஆய்வுகளை கொடுத்து, நீதிமன்ற உதவியுடன் இந்த படத்தை அடுத் தடுத்த கட்டமென நகர்த்திதான்,… இந்த ஜல்லிக்கட்டு முரட்டுக்காளை பலதையும் குத்திக் கிழித்துப் போட்டுவிட்டுத்தான்… திரைக்கு வந்து நிற்கின்றது.

அது, இயக்குனர் Msraj Raj என்ற தனி நபருக்கானது அல்ல. இந்த மண்ணுக்கானது. தமிழர் களுக்கானது, தமிழர்களின் பண்பாட்டை நேசிக்கும் யாரொருவருக்குமானது.

அன்று அந்த போராட்ட தழும்புகளை சுமந்த லட்சக்கணக்கான இளைஞர்கள்- மாணவர்கள்- மக்களுக்கானது.

இந்து, முஸ்ஸீம், கிருஸ்த்துவம் என்ற மத பேதங்களைக் கடந்து நின்ற அந்த போராட்ட களத்தை கலைத்ததில் முக்கிய பங்கு வகித்த ‘அவாள்’களின் ஒரு பிரிவு படத்தைப் பார்த்துவிட்டு…’முடக்க வேண்டும்- தடுக்க வேண்டும்’ என்று கூறலாம். வாய்ப்புள்ளது.

அதற்குள் ஒருமுறை படத்தை பார்த்துவிடுங்கள்… ஆமாம்.

பா. ஏகலைவன்

aanthai

Recent Posts

தூதரகங்களுக்கு வந்த விலங்குகளின் கண்கள் பார்சல் – உக்ரைன் அதிர்ச்சி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா…

24 hours ago

டிஎஸ்பி.- விமர்சனம்

ஐந்து வருடங்களுக்கு முன்னால் -அதாவது 2017இல் நல்ல ஸ்கிரிப்டுடன் வந்த விக்ரம் வேதாவுக்கு பிறகு ஏனோதானொவென்று திரையில் தோன்றும் போக்கு…

1 day ago

“வரலாறு முக்கியம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்புத் துளிகள்!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு…

1 day ago

பிராமண உயிர் அற்பமானதா என்ன ?!

முந்தாநாள் தில்லியின் ஜேஎன்யூ பல்கலைக் கழக வளாகத்தில் சில சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப்பட்டன. 'பிராமணர்களே இந்தியாவை விட்டு…

1 day ago

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையைச் சொல்லும் “விட்னஸ்”!

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி…

1 day ago

10 மாதங்களாக தொடரும் எரி பொருள் கொள்ளை – கார்கே குற்றச்சாட்டு!

நம் நாட்டில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்ததில் இருந்தே அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.…

2 days ago

This website uses cookies.