மெர்குரி – திரை விமர்சனம் =சினிமா ரசிகர்கள் கண்டு புரிந்து கொள்ள வேண்டிய படமிது!

மெர்குரி – திரை விமர்சனம் =சினிமா ரசிகர்கள் கண்டு புரிந்து கொள்ள வேண்டிய படமிது!

தமிழில் ஆரம்பகால சினிமாக்கள் ஒவ்வொன்றும் ஒரு மெசெஜ் குறிப்பாக சுதந்திர தாகம் அல்லது நாட்டுப்பற்றை வலியுறுத்தும் விதத்தில்தான் தயாரானது. காலப் போக்கில் சமீபகாலமாக தயாராகும் சினிமாக்களில் பெரும்பாலும் பொழுது போக்கு என்ற அம்சத்தை மட்டும் பிடித்துக் கொண்டு கதையோ, காட்சிகளுக்கான இணைப்போ இல்லாமல் இரண்டு மணி நேரத்திற்குக் குறையாமல் சினிமா என்ற பெயரில் எடுத்து ரிலீஸ் செய்து விட்டு காணாமல் போய் விடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இச் சூழ்நிலை யில் சமூக விழிப்புணர்வு ஊட்டும் விதத்தில் அதுவும் வசனமே இல்லாமல் ஒரு படத்தை வழங்கி அசத்த நினைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

தற்போது மத்திய அரசின் அனுமதியுடன் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் திட்டம், கூடங்குளம் அணுமின் திட்டம், டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், தேனியில் நியூட்ரினோ திட்டம் என எகிறிக் கொண்டே போகும்ம் தொழிற்சாலைகள் குறித்தும் அவைகளில் இருந்து நச்சுப் பொருட்களால் பாதிப்படையும் மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் குறித்தும் கவலைப்படும் மக்கள் அரசை எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள்.

இச்சூழ்நிலையில் கார்ப்பரேட் அரசியலை மையமாக வைத்து, செயல்படாத மெர்க்குரி ஆலையின் பின்னணியில், அந்த ஆலையால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி கதையை நகர்த்தி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அந்த மெர்க்குரி ஆலைக்குப் பெயரே கார்ப்பரேட் எர்த் என்பது தான்.

கொடைக்கானல் மலையைப் போல ஒரு மலை நகரம். அங்கே சுற்றுச்சூழலை நாசப்படுத்திய பாதரச ஆலையைப் போல ஒரு ஆலை. அந்த ஆலையின் நச்சினால் பாதிக்கப்பட்டு கேட்கும் திறனையும் பேசும் திறனையும் இழந்த ஐந்து நண்பர்கள். ஒரு நாள் இரவில் இவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு, வாகனத்தில் திரும்பிக்கொண்டிருக்கும்போது, ஒரு விபத்து நேரிடுகிறது. சம்பந்தமில்லாத ஒருவர் உயிரிழக்கிறார்.

பயந்துபோன நண்பர்கள் பிணத்தை ஒரு குழிக்குள் போட்டு மறைத்துவிடுகிறார்கள். அடுத்த நாள் வந்து பார்க்கும்போது, அங்கு அந்தப் பிணம் இல்லை. பிறகு மூடப்பட்ட ஆலைக்குள் ஈர்க்கப்படும் நண்பர்கள் ஒவ்வொருவராக சாகிறார்கள்.

அதே சமயம் கார்ப்பரேட் நிறுவனங்கள் விழிப்புணர்வற்ற கிராமப் பகுதிகளில் தங்களது நிறுவனத்தை நிறுவி மக்களைக் குறி வைத்து தங்களது திட்டங்களில் எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதையும், மக்களிடையே கார்ப்பரேட் அரசியல் உருவாக்கும் பிரிவினை பற்றியும் மெளனமாய் சொல்லி தனக்கான பங்கை மிகச்சரியாய் செய்திருக்கிறார். பொருத்தமான காலக்கட்டத்தில் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புது முயற்சியுடன் வந்துள்ள இந்தப் படத்தில் சொல்லப்ப்படும் அரசியலை சகலரும் அறிந்து கொள்வார்கள் என்று இயக்குநர் ஸ்டைலில் நம்புவோம்.

ஜஸ்ட்

ஒன்றே முக்கால் மணி நேரமே ஒடும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் செல்போனில் புது சேதி என்ன வந்திருக்கிறது என்று சோதிக்கும் அளவுக்கு படா படா ஸ்லோவா நகர்கிறது. அந்த ஆக்சிடெண்ட் ஏற்பட்ட பிறகு சூடு பிடித்தாலும்.மெளனப்படத்துக்கு சப் டைட்டில் எல்லாம் போட்டு ரசிகர்களை முட்டாளாக நினைத்த இயக்குநர் மீது எரிச்சல் வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஒளிப்பதிவாளர் திருவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும்தான் படத்தில் முதுகெலும்பாக பயன் பட்டிருக்கிறார் கள்.அதே சமயம் எடுத்துக் கொண்ட மெயின் கருவை படத்தில் மையமாக வைக்காமல எண்ட் கார்டில் ஸ்டில்ஸ் மூலம் அதிலும் வழக்கமான பாழடைந்த பில்டிங், அதற்குள் காரணமே இல்லாமல புகுந்து சாகும் கேரக்டர்கள், அவர்களை ஆவியாக வந்து கொல்வது என்று வெரி ஓல்ட் ஸ்டைலில் சொல்லி சொதப்பி விட்டார்(கள்) .. ஆனால் சினிமா ரசிகர்கள் கண்டு புரிந்து கொள்ள வேண்டிய படமிது என்பதில் சந்தேகமில்லை.

மார்க் 5/ 2.75

error: Content is protected !!