October 16, 2021

மெர்சல் – விஜய் = முக ஸ்டாலினுக்கு போட்டியா?

வழக்கம் போல் பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த விஜய் – அட்லீ படத்துக்கு ‘மெர்சல்’ என தலைப்பிட்டுள்ளது . விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதிலும் இப்போஸ்டரில் விஜய் பெயருக்கு முன்னதாக ‘தளபதி’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள். இதுவரை விஜய்க்கு முன்பாக ‘இளைய தளபதி’ என்ற பட்டத்தை பயன்படுத்தி வந்தார். ‘மெர்சல்’ படத்திலிருந்து வெறும் ‘தளபதி’ என்று சுருக்கியுள்ளார். இதன் மூலம் விஜய் முக ஸ்டாலினுக்கு போட்டியாக அரசியலில் களமிறங்க  வாய்ப்பிருப்பதாக தகவல்  வெளியாகி உள்ளது.

இந்த சென்னை பாஷை வார்த்தையான்  ‘மெர்சல்’ படத்தில் கிராமத்து தலைவர், டாக்டர், மேஜிக்நிபுணர் என மூன்று 3 கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் படத்தை பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சென்னை, ராஜஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

சென்னை மக்கள் பேசும் மொழிவழக்கில், ‘மெர்சல்’ என்பதற்கு அச்சதோடு மிரள்வது என்பது அர்த்தமாகும். அதே சமயம் ஜி எஸ் டிக்கு பிறகு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான பத்து நிமிடங்களில் ட்விட்டரில் வெளியான மெர்சல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான 10 நிமிடங்களில் 7800 பேர் ரிடிவிட் செய்துள்ளனர். 12 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர் என்பதும் மற்றொரு போஸ்டரை இன்று இரவு 12 மணிக்கு வெளியிடப்போவதாக தேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.