‘மெய்ப்பட செய்’ – விமர்சனம்!

‘மெய்ப்பட செய்’ – விமர்சனம்!

ம் நாட்டில் 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து இருந்தது. அத்துடன் இது போன்ற குற்றங்களில் ஈடுப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை ஒரு போது கிடைத்தில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவுகிறது. மேற்கண்ட இரண்டு சப்ஜெக்டுகளையும் கோர்த்து புது பார்வையில் மெய்ப்பட செய் என்ற பெயரில் ஒரு சினிமாவை வழங்கி இருக்கிறார்கள்..அதாவது பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டனை கொடுப்பதோடு, மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இப் படம்.

அதாவது தஞ்சை கிராமமொன்றில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ ஆதவ் பாலாஜி அதே ஊரில் இருக்கும் நர்ஸம்மா மதுனிகா மீது காதல் வயப்படுகிறார். வழக்கம்போல காதலுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு ஏற்பட்ட சூழலில், காதலியை திருமணம் செய்து கொண்டு அங்கிருந்து நண்பர்களுடன் சென்னைக்குப் புறப்படுகிறார். சென்னை வந்த இடத்தில் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகன்,ஒரு இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்து அப் பிணத்தை வீட்டினுள் புதைத்து இருப்பதைக் காண்கிறார்.. அதனால் அதிர்ச்சி அடைந்து இந்த பிணப் பிரசனையில் இருந்து விலகி போய் விடலாம் என்று ஆரம்பத்தில் நினைப்பவர்கள் பிறகு அதை எதிர்த்து நின்று போராடுவதோடு, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதற்காக களத்தில் இறங்குகிறார்கள். இறுதியில், அவர்கள் வென்றார்களா? இல்லையா? என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை.

ஹீரோவாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜிக்கு இது, முதல் படமாம் . அது தெரியாதது மாதிரி காதல், செண்டிமெண்ட், சண்டைக்காட்சி என அனைத்திலும் நேர்த்தியாக நடித்து அசத்தி இருக்கிறார். நாயகி மதுனிகாவும் வசீகரிக்கும் அழகாலும், நேர்த்தியான நடிப்பாலும் கவனம் பெறுகிறார்.

ஹீரோயின் தாய்மாமன் வேடத்தில் நடித்திருக்கும் பி.ஆர்.தமிழ் செல்வம், ஆரம்பத்தில் அடாவடி வில்லனாக வலம் வந்தாலும், இறுதியில் நல்லவனாக மாறிவிடுகிறார். திடமான உடம்போடு வில்லன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பவருக்கு கூடுதல் காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

கட்ட கஜா என்ற தாதா வேடத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் ஜெயபால், உட்கார்ந்த இடத்திலேயே மிரட்டுகிறார். அவருடைய தோற்றமும், வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறது.ஓ.ஏ.கே.சுந்தர், சூப்பர் குட் சுப்பிரமணி, ராஜ்கபூர், பெஞ்சமின், ராகுல் தாத்தா, பயில்வான் ரங்கநாதன், நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் என்று படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கேமராமேன் ஆர்.வேல், தன் பங்களிப்பில் பாஸ் மார்க் வாங்கி பாடல் காட்சிகளை ரசிக்கும்படியும், சண்டைக்காட்சிகளை மிரட்டலாகவும் காட்சிப்படுத்தியுள்ளார். பரணியின் இசையில் பாடல்கள் ஓ கே ரகம் அதிலும் பாரதமே பாரதமே என்கிற பாடல் உணர்வுபூர்வமாக.திரும்ப திரும்ப கேட்கும் ரகமாகவும், வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு சப்போர்ட் செய்கிறது.

முன்னரே சொன்னது போல் பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் அவர்கள் வெளியே வந்து விடுவதும் வாடிக்கையாகி போய் விட்டது. என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதில் உள்ள சந்து பொந்துகள் வழியாக குற்றவாளிகள் தப்பித்து விடுவதால் இப்படிப்பட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு என்ன விதமான தண்டனைகள் அளிக்க முடியும் – அவர்களை எப்படி தண்டிக்க வேண்டும் என்று வித்தியாசமாக தன் எண்ணத்தை நெருடல் இல்லாத காட்சி அமைப்புகளோடும், விறுவிறுப்பாக திரைக்கதையோடும் சொல்லி அசத்த முயன்றிருக்கிறார் இயக்குநர்..

மொத்தத்தில் மெய்ப்படசெய் புது கோணம்

error: Content is protected !!