January 29, 2023

மீண்டும்-திரைப்பட விமர்சனம்!

ஜீத் நடித்த சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணன் சுப்பையா நீண்ட வருடங்களுக்கு இப்படத்தை இயக்கி இருக்கிறார். சிட்டிசன் படத்தில் ஒரு ஊரே காணாமல் போனதாக சொல்லி அப்படத்தை பேச வைத்த சரவண சுப்பையா இப்படத்தில் சுனாமி பேரழி பற்றிய சந்தேகத்தை கிளப்பி அதிர வைத்திருக்கிறார். மேலும் ஆக்‌ஷன், குடும்ப செண்டிமெண்ட் என இருவித கதைகளையும் ஒன்றாக கலந்து சொல்வதென்பது மிகவும் கடினம் அதை சரிவிகிதத்தில் கலந்து அனைவரும் உணர்வுபூர்வமாக ரசிக்கும் படமாக இயக்குனர் சரவணன் சுப்பையா, ஹீரோ கதிரவன் தந்திருக்கின்றனர்.

கதை என்னவென்றால் உளவுத்துறையில் மறைமுகமாக பணியில் இருக்கும் கதிரவன் எப்போதும் தன் அரசு வேலையில் அதீத ஈடுபாட்டுசன் இருக்கிறார். இது, அவர் காதலித்து மணந்த அனகாவுக்கு பிடிக்கவில்லை. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், கணவர் வீட்டில் இருந்து வெளியேறி, தாய் வீட்டுக்கு சென்று விடுகிறார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனாலும்
அனகா, தாய் வீட்டிலேயே தங்கி விடுகிறார். அவரிடம் இருந்து குழந்தையை வாங்கி தானே வளர்த்து வருகிறார், கதிரவன். அவருக்கு இன்னொரு பக்கம் ஒரு அபாயகரமான வேலை வருகிறது. அதன்படி, அரசியல் செல்வாக்கு மிகுந்த ஒரு மோசடி மன்னனை அவர் கைது செய்கிறார். அப்போது ‘‘என்னை கைது செய்வதன் மூலம் எதுவும் நிற்கப்போவதில்லை. அது தானாகவே நடந்து கொண்டிருக்கும்’’ என்கிறார், அந்த ஆசாமி. அவர் சொன்னது போலவே வெளியுலகில் நாட்டுக்கு எதிரான சதிசெயல்கள் தொடர்கின்றன. சதிகாரர்களை கூண்டோடு ஒழிக்க கதிரவன் தன் மகனை அனகாவிடமும், அவருடைய இரண்டாவது கணவரிடமும் ஒப்படைத்து விட்டு துணிச்சலுடன், பக்கத்து நாட்டுக்கு கள்ளத்தோனியில் செல்கிறார். ‘கிளைமாக்ஸ், ’ எதிர்பாராதது.

கதிரவன் கதாநாயகனாக, பாசமிகு தந்தையாக, அன்பான கணவனாக, தைரியமிக்க வீரனாக கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். அதிலும் தீவு ஒன்றில் நடக்கும் தீவிரவாதிகளின் ரகசிய கூட்டத்தை அறிவதற்காக தனிஆளாக செல்லும் கதிரவன் அங்குள்ளவர்களிடம் சிக்கிக்கொண்டு கொடுமையான சித்ரவதை அனுபவிப்பது குறிப்பாக தலைகீழாக தொங்கவிட்டு நீரில் மூழ்கடிப்பது, நிர்வாணப்படுத்தி தடியால் அடித்து கொடுமைபடுத்தப்படும் காட்சிகளில் டூப் எதுவும் போடாமல் நடித்தார் என்பதை கேட்ட போது வியப்பேற்ப்படுவதை தவிர்க்க முடியவில்லை. அனாகாவிற்கு பாசத்திற்கு ஏங்கும் தாயாக இரண்டு கணவர்களுக்கு நடுவே தவித்து யதார்த்தமாக நடித்துள்ளார். இரண்டாவது கணவராக சரவணன் சுப்பையா மனைவியின் சந்தோஷத்திற்காக எதையும் கொடுக்கும் குணம், சிக்கலான கதாபாத்திரத்தை அமைதியாக, இயல்பாக, கணிவு மிக்க கணவராக நச்சென்று மனதில் பதிகிறார்.

ஸ்ரீனிவாஸ் தேவம்சம் ஒளிப்பதிவும் நரேன் பாலகுமார் இசையும் மீண்டும் கதை ஓட்டத்துக்கு தேவையான பங்களிப்பை செய்துள்ளது..

நாடு விட்டு நாடு போய் சாகசம் செய்யும் கதையில் கொஞ்சம் அதிகமாகவே நாடகத்தன்மை இருந்தாலும் ரசிக்கும்படியான அடுத்தடுத்த காட்சிக் கோர்வைகளால் கவர்ந்து விடுகிறார் இயக்குநர் சரவணன் சுப்பையா

மொத்தத்தில் மீண்டும் ரசிக்கத் தக்க சினிமா

மார்க் 3 / 5