உக்ரைனில் மருத்துவ படிப்பை பயின்றோர்: மத்திய அரசு கைவிரிப்பு!

உக்ரைனில் மருத்துவ படிப்பை பயின்றோர்: மத்திய அரசு கைவிரிப்பு!

க்ரைனில் பயின்றோர் இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தளர்வு கொடுத்தால் மருத்துவப் படிப்பின் தரம் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து உக்ரைனில் மருத்துவ படிப்பு பயின்று வந்த மாணவ, மாணவிகள் உக்ரைன் -ரஷ்யா போர் காரணமாக தாயகம் திரும்பிவிட்டனர். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பி இருந்தார்கள்.

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, அவர்கள் தங்கள் கல்வியை இங்கவே தொடர வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு இந்த தகவலை அளித்துள்ளது.

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர வழிவகை செய்யும் முறை தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் இடமில்லை என்றும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை முதன்மை மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேர்க்க முடியாது என்றும், அதிகப்படியான கட்டணத்தை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களால் செலுத்தவும் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ கல்வி மாணவர்களுக்கு மேற்குவங்க மாநில மருத்துவ கல்லூரிகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது உண்மையா? எனவும், மாநில மருத்துவ கல்லூரிகளில் வெளிநாட்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை அனுமதிக்கும் விதிமுறை தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநில மக்களவை உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தனர்.

அப்போது பதிலளித்த மத்திய சுகாதார மற்றும் பாரதி பிரவீன் பவார், “நாட்டின் மருத்துவ கல்வி ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ கல்வி ஆணையம் அளித்த தகவலின்படி மேற்குவங்க மாநிலத்தில் உக்ரைனியில் இருந்து திரும்பிய மாணவர்கள் மாநில மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கான எந்த தகவலும் இல்லை. இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வெளிநாட்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை மாநில மருத்துவ கல்லூரிகளில் படிப்பை தொடர விதிகள் ஏதும் இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் இதே நிலைப்பாட்டை மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!