தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!
இலங்கை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.vaiko-bandh-eps

2009-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோமீது சென்னை எழும்பூர் 11வது குற்றவியல் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றத்தில் வைகோ நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் தான் பிணையில் செல்ல விரும்பவில்லை என்று வைகோ நீதிபதியிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்பு, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தனது கைதைக் கண்டித்து, மதிமுகவின் மாவட்ட செயலாளர் உள்பட கட்சி முன்னணியினர் யாரும் எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. சிறைக்கு வந்து தன்னை யாரும் சந்திக்க வேண்டாம் எனவும் வைகோ கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!