நம்மில் பலரின் வாழ்க்கையில் கல்லூரிப் பருவம் எனது மறக்க இயலாதது. அதிலும் பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைக்கும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் கட்ட விழ்ந்து, செயல்களில் சுதந்திர காற்று வீசத்துவங்கும். அங்கே வகுப்பறைகள் பயமுறுத்து வதில்லை, சலிக்க வைக்கும் சீருடை இல்லை, நட்பு பாராட்ட கட்டுப்பாடு இல்லை. மேலும் கல்லூரி வாழ்க்கையில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்களை கண்காணிக்க ஆள் இல்லை என்பதால் பாதை மாரி போய் விடும் வாய்ப்பும் உண்டு இல்லையா? இதையெல்லாம் சுட்டிக் காட்டும் விதத்தில் மயூரன் என்றொரு படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவின் அசிஸ்டெண்ட் நந்தன் சுப்பராயன் வழங்கி இருக்கிறார்.

ஹாஸ்டலில் தங்கியபடி கல்லூரியில் படிக்கும் நாயகன் அஞ்சன். கம்யூனிஸ்ட் சிந்தனையுடன் வளரும் அஞ்சனுக்கு கல்லூரியில் அமுதவாணன் பாலாஜி ராதாகிருஷ்ணன் நண்பர். ம். அப்புறம்.. அதே ஏரியாவில் உள்ள ஹீரோயின் ஸ்மிதா மீது அவருக்கு காதல் வந்து அது திருமணம் வரை செல்கிறது. இதனிடையே அப்பகுதியில் பெரிய ரவுடியாக இருக்கும் வேலராமமூர்த்திக்கு அடியாள் ஆனந்த் சாமி, வட மாநில பையன் ஒருவனை வைத்துக் கொண்டு, கல்லூரி ஹாஸ்டலில் போதை மருந்து வியாபாரம் செய்கிறார். அந்த வியாபரத்தின் சர்ச்சையில் ஹீரோ அஞ்சனின் நண்பனை ஆனந்த் சாமி கொலை செய்துவிட, அதுக்கு பழிக்கு பழியாக ஹீரோ அஞ்சன் ஆனந்த் சாமியை கொலை செய்துவிடுகிறார். இதனால், அஞ்சனை கொலை செய்ய முடிவு செய்யும் வேலராம மூர்த்தி, அவரை தேட, அவரிடம் அஞ்சன் சிக்கினாரா இல்லையா, அவரது காதல் என்ன ஆனது, என்பது தான் கதை.

ஹீரோ அஞ்சன் புது முகம் என்றாலும் தனது கதாபாத்திரத்தைப் புரிந்து நடித்து பாஸ் மார்க் வாங்கி விடுகிறார் . நாயகி ஸ்மிதா கே.டோக்ரா கிடைத்த வாய்ப்பில் இயக்குநர் சொன்னதை செய்திருக் கிறார். வேலராமமூர்த்தியின் மிரட்டலான நடிப்பும், அவரது கதாபாத்திரமும்தான் படத்திற்கு தனி வெயிட் கொடுத்து இருக்கிறது.. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னை கச்சிதமாக பொருத்திக் கொள்ளும் ஆனந்த் சாமி இதிலும் தன்னை நிலை நிறுத்தி உள்ளார்.

கேமராமேன் பரமேஸ்வரின் ஒளிப்பதிவும், ஜூபினின் இசையும் மயூரன் படத்தை தனிக் கவனம் பெற வைத்திருக்கிறது.

எடுத்து கொண்ட ஹாஸ்டல், கல்லூரி வாழ்க்கை, போதை கோஷ்டி கதையை இன்னும் சுவைபட சொல்லி இருக்கலாம் இந்த இயக்குநர் நந்தன் சுப்பராயன்.

ஆனாலும் கல்லூரி மாணவர்கள் காணத் தகுந்த படம்தான் ம்யூரன்

மார் 2.25 / 5