September 25, 2021

டி10 எனும் கிரிக்கெட் போட்டிக்கு அமோக வரவேற்பு!

கிரிக்கெட் உலகில் டெஸ்ட் போட்டி மற்றும் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த போது, 2003-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் முதன்முதலில் டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டி10 எனும் புதிய கிரிக்கெட் போட்டி நடைமுறைப்படுத்த உள்ளது.

பாகிஸ்தான் அணியின் பிரபல அதிரடி வீரர் அப்ரிடி, இலங்கையின் குமார சங்ககாரா மற்றும் இங்கிலாந்து நாட்டின் மோர்கன் ஆகியோர் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த டி10 லீக்கில் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டிகள் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளன. மொத்தம் 90 நிமிடங்கள் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அணிக்கு பத்து ஓவர் வீதம் மொத்தம் 20 ஓவர்கள் கொண்டு போட்டிகள் நடத்தப்படும்.