February 7, 2023

’மருது’ – ரத்த களறி = திரை விமர்சனம்

கோலிவுட்டுக்குள் நுழைந்து மூன்றாவது படம் பண்ணும் முத்தையா மறுபடியும் அதே குட்டி புலி, கொம்பன் டைப் கதையைக் காட்டி சலிப்படைய வைத்திருக்கிறார் அட..கதை தான் ரிப்பீட்டு,என்றால் படத்தில் வரும் முக்கிய காட்சிகளுமா ஓல்ட் படத்தை நினைவுப்படுத்தும்.? இதையெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் ஆக்டர் சங்க செகரட்டரி அடிதடி, அருவாள், செண்டிமெண்ட் என்று அவரும் பழையை ஃபார்மில் வந்து போய் விட்டார்.

maruthu may 23

கதையென்று பார்த்தால்.. மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்யும் விஷாலுக்கு, தனது பாட்டி என்றால் கொள்ளைப் பிரியம். பிறகென்னா பாட்டி சொல்லைத் தட்டாத விஷாலோட அதே பாட்டியின் சுயநலத்தால், அநியாயத்தை எதிர்த்து நின்ற ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம் நம்ம சினிமா ஃபார்முலாப்படி அந்த பெண்ணின் மகளான ஸ்ரீதிவ்யாவை விஷால் காதலிக்கிறார்.இதற்கிடையில், ஸ்ரீதிவ்யாவின் அம்மாவை கொலை செய்த வில்லன் கூட்டதினால் ஸ்ரீதிவ்யாவுக்கும் ஆபத்து வர, இந்த முறை சுயநலம் பார்க்காமல், ஸ்ரீதிவ்யாவை காப்பாற்றுவதுடன், அவரை மனைவியாகவும் கரம் பிடிக்க வேண்டும் என்று விஷாலுக்கு பாட்டி கட்டளையிட, அதை அவர் நிறைவேற்றுவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் கதையாக்கும்

இதில் சுமை தூக்கும் தொழிலாளி வேடத்துகென்றே அவதரித்தவர் மாதிரி விஷால் கச்சிதமாக பொருந்துகிறார். அதிலும் டைரகரின் மாமா ஸ்டைலில், கையில் சிங்கம், மார்பில் புலி என்று பச்சைக் குத்திக் கொண்டு தெனாவட்டாக வில்லன்களை பந்தாடும் காட்சிகளில் மனுஷன் ஆக்ரோஷம் காட்டுகிறார். ராஜபாளையம் மனிதர்களில் ஒருவராக தோற்றத்தில் இருந்தாலும், பேச்சில் என்னவோ மற்றபடங்களில் நடித்த விஷாலாகவே தெரிகிறார். விஷாலுக்கு ஜோடி என்று பார்த்தால் அவ்வளவாக பொருந்தாத ஸ்ரீதிவ்யா, இந்த கேரக்டரைப் புரிந்து தனக்கான வேலையை சரியாகவே செய்திருக்கிரார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரமான விஷாலின் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கொல்ல புலி லீலா, நடிக்க ரொம்பவே முயற்சித்திருந்தாலும், அவரது தோற்றமும், வசனம் பேசும் விதமும், அவரை ராஜ பாளையத்து பாட்டியாக ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.

பயில்வான் என்ற வேடத்தில் நடித்துள்ள ராதாரவி, இந்த வேடத்தில் எதற்குதான் நடித்தார் என்பதே புரியவில்லை. அப்படி ஒன்றும் அவருக்கு படத்தில் பெரிய வாய்ப்பு ஒன்றும் இல்லை. முறைப்பது, கோபமாக பார்ப்பது என்று உப்புக்குச் சப்பாணி போல பயன்படுத்தப் பட்டிருக்கிறார்.

சூரி, இந்த படத்தில் காமெடி நடிகராக மட்டும் இன்றி குணச்சித்திர நடிகராகவும் நடித்திருந்தாலும், படத்தில் எடுபடுவது என்னவோ அவரது காமெடி மட்டும் தான். வேல்ராஜின் ஒளிப்பதிவு ஆக்‌ஷன் காட்சிகளை மெருக்கேற்றுது. இமானின் இசையில் பாடல்கள் ஓ கே ரகம்.

ஆனாலும் படத்தின் தொடக்கத்தில் வரும் அரிவாள், ஒட்டு மொத்த படம் முழுக்க ட்ராவல் செய்கிறது. குறிப்பாக வில்லன் கோஷ்ட்டியினர் நினைத்தவர்களையெல்லாம், நினைத்த இடத்தில் வெட்டுவதும், ஸ்ஸ்ஸ்ப்பா.. முடியல