Exclusive

குமரி விடுதலைப் போராட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் மார்ஷல் ஏ நேசமணி!

குமரி விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் பேசும் குமரி மக்கள் திருவிதாங்கூரிலிருந்து குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க திரு மார்சல் ஏ. நேசமணி தலைமையில் 1947 முதல் 1956 வரை நடத்தியப் தொடர் போராட்டத்தைக் குறிக்கும் . இப்போராட்டத்தின் விளைவாக நவம்பர் 1, 1956 ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. இப்போராட்டத்தை தலைமை தாங்கி வழி நடத்தி வெற்றி பெற்றதனால் குமரி மக்கள் மார்சல் நேசமணியை குமரித் தந்தை என்று அழைக்கின்றனர்.

உண்மையில், இந்தியா பல சிக்கலான வரலாற்று நிகழ்வுகளை எதிர்கொண்ட ஒரு நாடு. அந்த சிக்கலான நிகழ்வுகளின்போது, நியாயமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், அந்த நேரத்துக்கு சரியான முடிவை ஆட்சியாளர்கள் கையாண்டுள்ளனர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், தேசப் பிரிவினை என்பது மிகப் பெரும் இழப்புகளைச் சந்தித்த ஒரு சோகமான நிகழ்வு.

அப்போது, ஏற்பட்ட வன்முறையால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளைச் சந்தித்தது புதிதாக பிறந்த இந்தியா என்ற குழந்தை. அந்த நிகழ்வுகள் வரலாற்று சோகம். அதேபோல, மாநிலப் பிரிவினை என்பது மிகப் பெரும் சவால் நிறைந்த பணியாக இருந்தது நேரு தலைமையிலான அரசுக்கு. மாநிலப் பிரிவினையின் ஒரு நிகழ்வுதான் குமரி மாவட்டம் அதன் தாய் தமிழ்நாட்டுக்கு திரும்பக் கிடைத்த நிகழ்வு.

உண்மையில், மொழிவாரி மாநிலப் பிரிவினையில் தமிழ்நாடு இழந்த பகுதிகள் அதிகம் என்பது தமிழ் அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் கருத்தாக இருந்து வருகிறது. இருப்பினும், அத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் கன்னியாகுமரி தாய் தமிழகத்துடன் இணைத்த பெருமைக்கு சொந்தக்காரர் நேசமணி. அவர் காண்ட்ராக்டர் நேசமணி அல்ல. மார்சல் நேசமணி. ஆம், அவர் தான் குமரி தந்தை.

திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் 1921ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து பணியாற்ற தொடங்கினார். நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆதிக்க சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும் தாழ்த்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு சாதாரண இருக்கையும் இடப்பட்டிருந்தது. முதல் நாளே இருக்கையை காலால் உதைத்துவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதி வேறுபாட்டை ஒழித்தார் நேசமணி.

மேலும், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் ஆதிக்க சாதி வழக்கறிஞர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதி வழக்கறிஞர்களுக்கும் தனித்தனியாக இருந்த குடிநீர்ப் பானையை உடைத்துவிட்டு ஒரே பானையை வைத்தார் நேசமணி. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. இங்கு வாழ்ந்த பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்ததால், இதனை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு போராட்டம் வெடித்தபோது, கேரள அரசு கடும் அடக்குமுறைகளை மேற்கொண்டது. நேசமணி தலைமையில் இந்தப் போராட்டம் எழுச்சி பெற்று, நீண்ட போராட்டத்துக்குப் பின், 1956 நவம்பர் மாதம், முதலாம் தேதி, அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து கன்னியாகுமரி மாவட்டம் உதயமானது.

1956ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழ் நாட்டோடு இணைந்த பின்னர் நடைபெற்ற 1962, 1967 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பாராட்டப்பட்டார்.

மக்களுக்கு ஆற்றிய அரும்பணியால் மார்சல் நேசமணி அன்பாக அழைக்கப்பட்டார். மார்த்தாண்டத்திற்கு அருகில் இவரது பெயரில் பாலம் ஒன்று உள்ளது.

நாகர்கோவிலில் கட்டப்பட்ட மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தினை 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளான நவம்பர் 1, அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மார்ஷல் ஏ நேசமணி பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

aanthai

Recent Posts

அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘ரத்தம்’ பட டீசர்!

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' பட டீசர் பார்வையாளர்களிடையே, படம் குறித்த எதிர்பார்ப்புகளைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் நடிகர்…

7 hours ago

சங்கராந்தியன்று இரட்டைப் பரிசு வழங்கும் ஸ்ருதிஹாசன்!

'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின்…

12 hours ago

அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை சுரேஷ் காமாட்சி ரிலீஸ் செய்கிறார்!

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம்…

13 hours ago

நல்ல கலை இயக்கம் என்பது வெளியே தெரியாமல் இருப்பதுதான்: கலை இயக்குநர் வீரசமர்!

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் 'காதல்' திரைப்படத்திலிருந்து சுமார் 30 படங்களுக்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் வீரசமர் .இவர் 'வெயில்', 'பூ',…

14 hours ago

கனெக்ட் படத்தில் என்ன ஸ்பெஷல்? – டைரக்டர் அஸ்வின் சரவணன் பகிர்ந்தவை!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்…

1 day ago

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து வெளியேற திட்டம்?

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள்…

2 days ago

This website uses cookies.