October 20, 2021

பேமிலியோடு போய் பார்க்கக் கூடிய பட பட்டியலில் கோலிவுட்டுக்கு வந்துள்ள மரகத நாணயம்!

ஹாலிவுட், பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் ஒவ்வொரு சீசன் வந்து போவது வாடிக்கை. அதிலும் எல்லா மொழியிலும்  பேய் கதை எத்தனையோ வந்துள்ளன. குறிப்பாக தமிழில் இதுவரை 1345 பேய் படங்கள் வந்திருப்பதாக பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆவி சொன்னதாக ஒரு நிருபர் சொன்னார். இவைகளில் 1000 பேய்களுக்கு மேல் பழி வாங்கும் பேய் கதையாம். 200க்கும் அதிகமான கதை ஆவிக் கதையாம். மிச்சமுள்ளவைகளில் திகில், மிரட்டல், கொடூரம்தான் அதிகமாக நிறைந்திருக்கிறது என்றும் நிருபர் சொன்னார். அதாவது அந்தக் கால ஜகன் மோகினி தொடங்கி யார், பேபி இயக்கிய மைடியர் லிசா, 13-ம் நம்பர் வீடு தொடங்கி அரண்மனை, சிவலிங்கா, சங்கி புங்கிலி கதத்தொற வரை பலதர்ப்பட்ட பேய் கதைகள் வந்தாலும் இப்போ ரிலீஸாகி இருக்கற மரகத நாணயம் பேய் டைப்பே வேற லெவல், ரொம்ப நல்ல பேய்கள் அதிலும் ஹிஸ்டரி, ஜியாகிராபி, எத்திக்ஸ் எல்லாம் சொல்லிக் கொடுக்கும் புது வகை பேய்கள் என்பதிலேயே ஆடியன்ஸை கவர்ந்து விடுகிறது இந்தப் படம்.

’மரகத நாணயம்’. முன்னொரு காலத்தில் இரும்பொறை என்ற மன்னன் கையிலிருந்த அரிய வகை வைரக்கல். இந்த`மரகத நாணயத்தைக் கண்டு பிடித்து களவாடி வந்தால் கோடிக்கணக்கில் பணம்’ என்று சீனாக்காரன் ஒருவனுடன் இணைந்து முயற்சிக்கிறார் மைம் கோபி.. அந்த முயற்சியில் கூட்டு சேரும் ஆதி ம. நா. குறித்து, இன்வெஸ்ட்டிகேட் பண்ணும் முன்பு இதை எடுக்க முயற்சித்த 132 பேர் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள் என்று தெரிந்து பயந்து ஒரு சாமியார் தயவை நாடுகிறார்கள்.அந்த சாமியாரான நம்பூதிரி கோட்டா ஸ்ரீநிவாச ராவ் திட்டப்படி ஆவி ஒன்றை துணைக்கு அழைக்க.. அதன் உதவியால்.மரகத நாணயத்தை ஆதி எப்படி எடுத்தார், அப்புறம் என்னாச்சு என்பதை வயிறு வலிக்க சிரிக்கும்படி சொல்லி இருக்கிறார்கள்.

ஹீரோவான ஆதி செங்குட்டுவன் எனும் கேரக்டரில் .,கனவு  கண்டபடி காதல் வயப்பட்ட கடத்தல்காரராக  வந்து போயிருக்கிறார். அதிலும் படத்தின் பெரும்பாலான கேரக்டர்களுக்கு இவரை விட இம்பார்ட்டெண்ட் மற்றும்  டயலாக் இருந்தும் இ ந்தப் படத்தில் தோன்றியுள்ள ஆதிக்கு ஸ்பெஷல் பொக்கே ஒன்று பார்சல் அனுப்பியே ஆகணும். அதே சமயம் ஹீரோயின் நிக்கி கல்ராணி சாணக்யா எனும் கேரக்டரில், ஒரு ஆணின் ஆவியை சுமந்த இளம் பெண்ணாக  வந்து “ஏய்கிழிஞ்ச வேஷ்டி … யாரைப் பார்த்து பொண ங்கற … ” என எல்லோரையும்  மிரட்டுவதைப் பார்க்கவும், கேடகவுகே ஸ்வீட்டாக இருக்கிறது..

மேலும் தொடக்கத்தில் ஸ்மக்ளராக வரும் ராமதாஸ் பின்னர் ஆவியாகி வந்து செய்யும் சேட்டைகளுக்கும் அடிக்கும் வாய் சவடால்களுக்கும் தியேட்டர் முழுக்க சிரிப்பலை வந்து வந்து போகிறது. ஆதியின் நண்பனாக வரும் டேனியலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். மேலும் யூனிஃபார்ம் காஸ்டியூமுடன் நாலைந்து அடியாட்களுடன் ஒரு மைக் + ஸ்பீக்கர் செட் சகிதம் வில்லன் ரோல் செய்துள்ள டிவிங்கிள் ராமநாதன் – பெயரில் வரும் ஆனந்தராஜ் அடிக்கடி அப்ளாஸ் வாங்கிறார். .

அறிமுக இயக்குனர் சரவன் .பேன்டசி என்றொரு சமாச்சாரத்தைப் பிடித்துக் கொண்டு கதையை கேஷூவலாக சிரித்துக் கொண்டே நகர்த்தியிருப்பதில் தனி கவனம் பெற்றுள்ளார். பேமிலியோடு போய் பார்க்கக் கூடிய பட பட்டியலில் கோலிவுட்டுக்கு வந்துள்ள மரகத நாணயம் இது என்று சொல்லலாம்!