September 17, 2021

மங்கள்யான் – செவ்வாய் பாதையில் 3 ஆண்டை நிறைவு செய்தது

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மங்கள்யான் செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவியது. ஓராண்டு பயணத்துக்கு பின்னர் இந்த செயற்கைக்கோள் 2014ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. இதன்மூலம், வல்லரசு நாடுகள் மட்டுமே பெற்றிருந்த பெருமையை இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சியில் பெற்றது.

இந்த செயற்கைக்கோளில் இருக்கும் எரிபொருள், திட்டமிட்டதை விட மேலும் 6 மாதங்களுக்கு பயன்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், 2015 ஜூனில் பேட்டியளித்த இஸ்ரோவின் அப்போதைய தலைவர் கிரண்குமார், மங்கள்யானில் உள்ள எரிபொருள் பல ஆண்டுகளுக்கு வரும் என்று தெரிவித்தார். தற்போது மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்து 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்துள்ள பெருமை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.