பாஸ்போர்ட்டுலே அம்மா பேரு மட்டும் போதும்- அப்பா பேர் வேணாம்! – அமைச்சர் மேனகா வேண்டுகோள்

பாஸ்போர்ட்டுலே அம்மா பேரு மட்டும் போதும்- அப்பா பேர் வேணாம்! – அமைச்சர் மேனகா வேண்டுகோள்

பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது தந்தை பெயருக்கு பதிலாக தாயின் பெயரை மட்டும் பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் எந்த ஒரு திட்டத்திலும் இணைவதற்கு நாம் விண்ணப்பிக்கும் போது தாய் மற்றும் தந்தையின் பெயரை குறிப்பிடுவது வழக்கம். அதே போல் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போதும் தாய் மற்றும் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டும். இந்த சூழலில் டெல்லியில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் பிரியங்கா குப்தா என்பவர் தன் மகள் கரீமாவுக்கு பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்தார்.

passport jy 17

விண்ணப்பத்தில் தந்தையின் பெயரை குறிப்பிடாததால் பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து அவர் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைச்சர் மேனகா காந்தியிடம் புகார் அளித்தார். அந்த புகாரில், என்னையும், எனது மகளையும் விட்டுவிட்டு சென்று விட்டார். எனது மகளை கஷ்டப்பட்டு நான்தான் வளர்த்து ஆளாக்கினேன். இந்த சூழலில் அவரது பெயரை பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனவே பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தாயின் பெயரை மட்டும் பதிவு செய்ய அனுமதி அளிக்க உதவ வேண்டும் என்று அதில் கேட்டிருந்தார்.

இதை தொடர்ந்து பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் பெயரை பதிவு செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு மேனகா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நாட்டில் தற்போது தந்தையை பிரிந்து தாயுடன் மட்டும் வளர்ந்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. எனவே பாஸ்போர்ட் போன்றவற்றில் தந்தையின் பெயருக்கு பதிலாக தாயின் பெயரை மட்டும் பதிவு செய்யும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என சுஷ்மாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்’ என்று கூறினார்.

Related Posts

error: Content is protected !!