ஐந்து மொழிகளில் உருவாகும் “அஹம் பிரம்மாஸ்மி”-க்கு பூஜை போட்டாச்சு!
ராக்கிங்க் ஸ்டார் மஞ்சு மனோஜ் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு அதிரடியான அவதாரத்தில் மீண்டும் ரசிகர்களை ஈர்க்க வருகிறார். “அஹம் பிரம்மாஸ்மி” என தலைப்பிடப்பட்டுள்ள அவரது புதிய படம், அழுத்தமான கதையுடன் நேர்த்தியான வடிவத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது.இப்படத்தின் துவக்க விழா பிரபலங்கள் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது.
மெகா பவர் ஸ்டார் ராம்சரண் விருந்தினராக கலந்து கொண்டு க்ளாப் அடிக்க, அந்த காட்சியை பேபி நிர்வாணா இயக்க படப்பிடிப்பு துவக்கப்பட்டது. தெலுங்கு சினிமாவின் பிரபல ஆளுமை களான மோகன் பாபு, பருசேரி கோபாலகிருஷ்ணா திரைக்கதை பிரதியை படைப்பாளிகளிடம் தந்தனர். மஞ்சு லக்ஷ்மி, சுஷ்மிதா கோனிடேலா கேமாராவை இயக்க பேபி வித்யா நிர்வாணா முதல் ஷாட்டை இயக்கினார். விருந்தினர்கள் அனைவரும் படம் சிறப்பாக வர படக்குழுவை வாழ்த்தினர்.
முழு இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் “அஹம் பிரம்மாஸ்மி” படத்தை இயக்குநர் ஶ்ரீகாந்த் N ரெட்டி இயக்குகிறார்.
நடிகை ப்ரியா பவானி சங்கர் இப்படத்தில் மஞ்சு மனோஜ் ஜோடியாக நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் விபூதி அணிந்து வித்தியாச தோற்றத்தில் நகைப்பு, ரௌத்திரம், அமைதி என மூன்று பாவங்களை வெளிப்படுத்தும் மஞ்சு மனோஜின் தோற்றம் அனைவரையும் ஈர்த்து தீயாக பரவி வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்திரைப்படத்தை மஞ்சு மனோஜ் மற்றும் நிர்மலா தேவி MM Arts நிறுவனம் சார்பில் தயாரிக்க, வித்யா நிர்வாணா, மஞ்சு ஆனந்த் இப்படத்தினை வழங்குகிறார்கள்.