June 24, 2021

மேற்கு வங்க முதல்வராக மம்தா பானா்ஜி பதவி ஏற்றுக் கொண்டார்! – வீடியோ

ன்றைய காலக்கடத்தில் ஆங்காங்கே வன்முறையால் சிவப்பு மயமாகி இருக்கும் மேற்கு வங்கத்தின் முதல்வராக தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானா்ஜி பதவி ஏற்றுள்ளார். இவருக்கு மாநில ஆளுநா் ஜெகதீப் தங்கர் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்த நிலையில் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற தேதிலில் 213 தொகுதிகளில் வெற்றிபெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதையடுத்து, மாநில முதல்வராக மம்தா பானர்ஜி இன்று பதவி ஏற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், அவர் மட்டுமே இன்று பதவி ஏற்றார். அமைச்சரவை விரைவில் பதவி ஏற்கும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க,மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டச்சார்ஜி,எதிர்க்கட்சி தலைவரான அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பீமன் போஸ்,திரிணாமுல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி,தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி உள்பட குறைந்த அளவிலான முக்கியஸ்தகர்கள் கலந்துகொண்டனர்.

பதவி ஏற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன். உலகில் உள்ள பலரும், இந்த தேசமும் மே.வங்கத்தில் தேர்தலில் என்ன நடக்கும் என எதிர்பார்த்திருந்தனர். என்னுடைய முதல் முன்னுரிமை என்பது மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதுதான். அனைவரும் அமைதி காத்து, வன்முறையில்லாத சூழலை உருவாக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மேற்கு வங்க மாநிலம் வன்முறையை விரும்புவதில்லை, வன்முறையை நான் ஆதரிக்கமாட்டேன்.கடந்த 3 மாதங்களாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படிதான் அரசாங்கம் செயல்பட்டது. பல திறமையற்றவர்கள் பணியில் உள்ளனர். ஆனால் நான் வந்துள்ளதால், நிர்வாகச் சீர்திருத்தம் செய்யப்படும்” என்றார்