April 1, 2023

மாளிகப்புரம் – விமர்சனம்

முன்னொரு காலத்தில் திரையுலகி டாப் ஆர்டிஸ்டுகளின் படத்திற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஆன்மீக படங்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தது. குறிப்பாக 80 மற்றும் 90களில் நடித்த டாப் நடிகைகள் அனைவரும் ஆன்மீக படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த நடித்தனர்.பெரும்பாலான நடிகைகள் ஆன்மீக படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்கள். ஆனால் இப்போது அத்தகையை ஆன்மீக படங்கள் அருகி போனாலும் அரிதாக வரும் பக்தி படமும் ப்சக்கென்று மன்சில் ஒட்டிக் கொள்ளும் விதத்தில் அமைந்து விடுகிறது.. அப்படித்தான் கடவுள் பக்தியை விட உழைப்பு மட்டுமே ஒருவனை உயர்த்தும் என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்திருக்கும் மாளிகப்புரம் படம் ரசிக்கும்படியே உள்ளது.

அதாவது சிறுமி தேவநந்தாவுக்குச் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க ஆசை.அதை ஏற்று சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்ன அப்பா கடன் நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்கிறார். அதனால், தோழன் ஸ்ரீபத் உடன் வீட்டுக்குத் தெரியாமல் சபரிமலை புறப்பட்டுச் செல்கிறார் சிறுமி தேவநந்தா. அந்தப் பயணத்தில் அவர்களை ஆபத்து சூழ்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? என்பதைச் சொல்லியிருக்கும் படம் மாளிகப்புரம்.

நாயகியாக வரும் சிறுமி தேவநந்தா சோ க்யூட்.. அந்த ரோலைப் பக்காவாக புரிந்து அதகளம் செய்துள்ளாள்…வெள்ளந்திச் சிரிப்புடன் உலா வரும் அவளுக்கு ஏற்படும் அளவுக்கு மீறிய சோகத்தையும் முகத்தில் காட்டிக் கலங்க வைப்பதிலும் ஸ்கோர் செய்து மனசை கவர்கிறாள்..

அவருடன் வரும் சிறுவன் ஸ்ரீபத் துறுதுறுப்புடன் கேஷூவலான காமெடியுடன், படம் முழுவதும் நிறைவாகவும், இயல்பாகவும் அசத்தியுள்ளார். சைஜு குருப் அந்த வழக்கமான அப்பா கதாபாத்திரத்தின் மூலம் கண் கலங்க வைத்து விடுகிறார். வில்லனாக சம்பத் ராம் வசனம் குறைவு என்றாலும் முறைக்கும் வில்லப் பார்வையாலேயே அனைவரின் எதிர்ப்பை சம்பாதித்து விடுகிறார்.உன்னி முகுந்தன் ஐய்யப்பனுக்கு இணையான பாதுகாவலராக நடிக்கிறார். முதலில் ஐயப்ப பக்தராக தாடி மற்றும் இனிமையான தெய்வ புன்னகையுடன் தேவநந்தாவின் மனதில் சுவாமி ஐயப்பனாக தோன்றும் வடிவில் குழந்தைகளின் கடவுளாக நம்பும்படி அனைவருக்கும் காட்டப்பட்டாலும், இறுதியில் அவரின் கேரக்டரின் மாற்றம் அடடே சொல்ல வைத்து விடுகிறார் . காவல்துறை அதிகாரியாக வரும் மனோஜ் கே.ஜெயன், கொஞ்சநேரமே வந்தாலும் சிறப்பு.

விஷ்ணு நாராயணைன் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப அமைந்துள்ளது. ரஞ்சன் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

கதை எழுதி இயக்கியிருக்கும் விஷ்ணு சசி சங்கர், ஒரு பக்தி படத்தை தற்போதைய காலக்கட்ட எதார்த்த வாழ்க்கையோடு சேர்த்து மனிதம் தான் கடவுள் என்று விறுவிறுப்பாக சொல்லி கவர்கிறார்