September 26, 2021

மலேசியாவில் வாக்குப்பதிவு அமோகம்… யார் அதிபர்??

மொத்தம் 222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடந்து முடிந்தது.பிரதமர் நஜீப் ரஷாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது..அனல் பறந்த பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் ஓட்டு போட்டனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 3 மணி நிலவரப்படி 69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடங்குகிறது. முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காகவும், 222 நடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 12 மாநில சட்ட மன்றங்களுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதான வேட்பாளர் களான முஹமதும், ரசாக்கும் தங்களது வாக்குகளை அடுத்தடுத்து பதிவு செய்தனர். கடந்த 22 ஆண்டுகள் மலேசிய பிரதமராக பதவி வகித்தவரும் எதிர்கட்சி வேட்பாளருமான மஹதீர் முகமதிற்கும், தற்போதைய பிரதமரும் ஆளுங் கட்சி வேட்பாளருமான நஜீப் ரஸாக்கிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இதை தொடர்ந்து, நஜீப் ரஸாக் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பை முறைப் படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் இவருக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மலேசிய பிரதமர் மீது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் மலேசியாவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்து வரும் தேசிய முன்னணி கூட்டணிக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் விறுவிறுவென வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் முடிவை மலேசிய மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்க்கின்றனர்