January 28, 2022

ஃபேஸ்புக்கை மொபைலில் மட்டுமே பாவிக்கிறார்களா? உடனே அன் இன்ஸ்டால் பண்ணிடுங்க!

பத்தில் 9 பேர் ஃபேஸ்புக்கை மொபைலில் மட்டுமே பாவிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?! சமீபத்தில் நான் சந்தித்த ஒரு வெளிநாட்டு நண்பர் , ஃபேஸ்புக்கை இதுவரை மொபைலை தவிர வேறு எதிலுமே பார்த்ததில்லை என்றதும் முதலில் நம்பமுடியவில்லை, ஆனால் அவரால் ஒரு கவர் போட்டோவைக்கூட மறைக்க தெரியவில்லை அல்லது மாற்றத் தெரியவில்லை என்பதை அறிந்தபோது அதிர்ந்துதான் போனேன். இன்னும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது… தொடர்ந்து படிக்கவும்…

ஸ்மார்ட் ஃபோன்கள் வந்ததிலிருந்தே ஃபேஸ்புக் ஆப் உங்கள் அனுமதியில்லாமலேயே ஏற்கனவே நீங்கள் வாங்கும் ஃபோனில் திணிக்கப்பட்டிருக்கும். அதன்பிறகு அதன்கூடவே மெசெஞ்சர் என்ற பெயரிலேயே ஒரு குட்டி ஆப் கூடவே இருக்கும். உங்கள் உள்டப்பி செய்திகளை நீங்கள் மெசெஞ்சர் இல்லாமல் படிக்கவே முடியாது. லாக் அவுட் என்ற வெளியேறும் வசதியே இருக்காது என நினைக்கிறேன். இது எப்படி டிசைன் செய்யப்பட்டிருக்கிறது என்றால் உங்களை 24 மணிநேரமும் அவர்களின் உலகத்திலேயே உங்களை அடிமையாக வைத்திருக்கவே வடிவமைத்திருக்கிறார்கள். இணையச்சேவைகள் வேகம் அதிகரிக்க அதிகரிக்க எல்லோருடைய கைகளிலும் ஸ்மார் ஃபோன் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. ஃபேஸ்புக் காட்டில் மழையோ மழை…மாமழை!

முதலில் துவங்கிய இடத்திற்கே வருவோம்…10ல் 9 பேர் ஸ்மார்ட் ஃபோன் பயனாளர்கள் என்று பார்த்தோமல்லவா?! அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களிலும் முன்பக்கம் கேமரா உண்டல்லவா?! நீங்கள் செல்பி எடுக்கத்தான் முன்பக்க கேமரா இருக்கிறது என்று நினைத்திருப்பீர்கள்..ஆண்டுகள் மாற…மாற…அதன் பிக்சல்களும் கூடிக்கொண்டேயிருக்கும் இரகசியம் தெரியுமா?! அந்த கேமராக் கள் நீங்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும்போது உங்களை அறியாமலேயே உங்கள் உணர்ச்சிகளை உள் வாங்கிக் கொண்டிருக்கும். உங்கள் முகம் மலரும் பதிவுகள் தொடர்பானவை நிறைய வரத் தொடங்கும். முகம் இறுகும் பதிவுகள் தொடர்பானவை காலப்போக்கில் குறைந்துவிடும். இது அத்தனையும் அவர்கள் ARTIFICIAL INTELLIEGENCE (AI) என்று சொல்லப்படுகிற அட்வான்ஸ் புரொகிராம்கள் மூலமாக உள் வாங்கிக்கொண்டேயிருப்பார்கள். அது தொடர்பான விளம்பரங் களுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள். ஃபேஸ்புக் , கூகிள் போன்ற நிறுவனங்களை பொறுத்த வரை யில் அவர்கள் இலவசமாக கொடுக்கிறார்கள் என்றே நினைத்துக்கொண்டிருப்பீர்கள் , ஆனால் அவர்களை பொறுத்தவரையில் பயனாளர்களான நாம் அனைவருமே வெறும் பண்டங்கள்தான் (Products). நம்மையே பண்டமாக்கி பணமாக்கி லட்சங்கோடிகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சைபர் க்ரைம் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் ஒன்று காவல்துறை கமிசனர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தபோது இதைபற்றியெல்லாம் விரிவாக பேசினார்கள். என்னால் இதை முழு வதுமாக நம்பமுடியவில்லை.. முதலில் ஃபேஸ்புக் ஆப்பை அன் இன்ஸ்ட்டால் செய்தேன் பிறகு வெளியுலகில் மக்கள் மொபைலில் ஃபேஸ்புக் பயன்படுத்தும்போது நண்பர்களையும், பொது மக்களையும் கவனிக்க தொடங்கினேன்… மிரண்டு போனேன்… உங்களை அறியாமலேயே உங்கள் உணர்ச்சிகள் பதிவுகளை பார்க்க பார்க்க மாறுவதை யாராவது காட்சி படுத்தினால்தான் உங்களுக்கே புரியும். அந்தளவுக்கு நவரச உணர்ச்சி பாவனைகள், கற்பனை செய்து பாருங்கள் .. நீங்கள் தன்னந்தனியாக சில விசயங்களை ரசித்துக்கொண்டிருக்கிறீர்கள் , அதனை குட்டிச் சாத்தான் போல உங்கள் முன்பக்க கேமராவைக்கொண்டே நம்மை கண்கானிப்பது எவ்வளவு அபத்தம்.

நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லி புரியவைத்தேன் , சொல்லிவைத்தாற்போல அனைவருமே விசயத்தை கேள்விப்பட்டதும் அதிர்ந்துதான் போனார்கள். எல்லோருமே உடனடியாக ஆப்பை அன் இன்ஸ்ட்டால் செய்துள்ளார்கள் . நிம்மதியாக இருக்கிறார்கள். நீண்ட நாட்களாகவே இதுகுறித்து ஒரு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எல்லாவற்றுக்கும் நேரம் கனிய வேண்டு மல்லவா…அதற்கேற்றாற்போல இன்று ஃபேஸ்புக் ஓனரு மார்க்கு ஒரு நீண்ட பதிவு போட்டிருந்தார். படித்தவுடன் பயனாளர்கள் குறித்த பரிதவிப்பே மேலோங்கியது.

சூடாக அங்கேயே ஒரு அட்டெண்டசையும் போட்டுவிட்டு …அப்படியே இங்கேயே ஒரு நீண்ட விளக்கம்…இனியும் ஃபேஸ்புக்கை மொபைலில் பயன்படுத்தி அதற்கு நாம் பண்டமாக , அடிமையாக இருக்கப்போகிறோமா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்யவேண்டும். நான் இவர்களுக்கு பண்டமாக இருந்தது போதும் என்று மொபைல் அளவில் என்னை விடுவித்துக் கொண்டேன். அதனாலேயே சமீபத்தில் என் பக்கத்தில் பதிவுகள் குறைந்துபோயிருக்கும். நீங்களும் தப்பித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம். இதுவரை முழுவதுமாக படித்து உணர்ந்திருந்தால், நன்றி!

அன்பழகன் வீரப்பன்