March 31, 2023

இலங்கை பிரதமரானார் இம்சை அரசன் ராஜபக்சே!

நம் தமிழ் உறவினர்களுக்கு இன்னல்களை மட்டுமே அளித்து வரும் இலங்கை அரசியலிலும் அரசாங்கத்திலும் திடீர் திருப்பம் ஏற்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். இதனை அடுத்து, அந்த பதவியில் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டு உடனடியாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திபால சிறீசேனா அதிபராக இருந்து வந்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்து வந்தார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி இன்று தீடீரென உடைந்தது.

இதனை அடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் ஆளும் கூட்டணியிலிருந்து விலகியதால் அதிபர் பதவியிலிருந்து சிறீசேனாவும் விலகினார்.

இதை அடுத்து இலங்கை சுதந்திரா கட்சியின் முன்னாள் தலைவராகவும் முன்னாள் அதிபராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். அதுவும் முன்னாள் அதிபர் மைத்திபால சிறீசேனா முன்னிலையில் ராஜபக்சே பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார்.

இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சியை வழிநடத்திய ராஜபக்சே, கடந்த உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.