February 5, 2023

மஹாவீர்யர் ; திரை விமர்சனம்

முன்னொரு கால சம்வத்தையும், நிகழ்கால நடப்பையும் கோர்த்து நிவின்பாலி நடிப்பில் அப்ரிட் ஷைன் என்பவர் இயக்கியுள்ள புதுமையான படமே மஹாவீர்யர். . இவர் ஏற்கனவே 1983 மற்றும் ஆக்சன் ஹீரோ பைஜு என இரண்டு ஹிட் படங்களை நிவின்பாலியை வைத்து இயக்கியவர். அதாவது ராஜா ஒருவருக்கு விக்கல் வந்துவிடுகிறது, அந்த விக்கல் நிற்காமல் அவருக்கு சிக்கலாய் இருக்கிறது இதனால் ராஜா தனது மந்திரியிடம் இந்த நாட்டில் உள்ள ஒரு அழகான பெண்ணை அழைத்து வா என்கிறார் ,மந்திரி ராஜாவிடம் உங்களுக்கு தான் ஏற்க்கனவே நிறைய மனைவிகள் இருக்கிறார்களே என ராஜாவிடம் சொல்கிரார், ராஜாவோ அழைத்து வா என்கிறார்… இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நிவின் பாலி சாமியாராக ஒரு கோவில் அருகில் உள்ள மரத்தடியில் இருக்கிறார் அவர் அருகில் இருக்கிற அந்த கோவிலில் உள்ள சிலை காணாமல் போகிறது அப்படி காணாமல் போன சிலை இவரது அருகில் இருக்கிறது, அதனால் அவர்தான் அந்த சிலையை திருடினார் என போலீஸ் கைது செய்கின்றனர் அந்த ராஜாவின் விக்கலுக்கும் இந்த சிலை திருடியவர் கதைக்கும் என்ன சம்மந்தம் என்பதுதான் மஹாவீர்யர் கதை. இதனை மிக சுவாரசியமாக கூற முயன்று அதில் வெற்றிபெற தவறிவிட்டார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் சகலரும் இப்படத்தை புரிந்து கொள்ளவது என்பது சந்தேகம்தான். ஆரம்பத்தில் ராஜா & மந்திரி காலம் மற்றும் தற்காலம் என இரண்டு விதமான காலகட்டங்களில் கதை நகரும்போது ஓரளவு சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு கதையின் போக்கு இலக்கு மாறி விடுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸுக்கு 20 நிமிடத்திற்கு முன்பான நீதிமன்ற காட்சிகள் வளவளவென்று போய் சற்று எரிச்சலூட்டுவது உண்மைதான்.

நிவின்பாலி சாமியார் கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். முதல் பாதியில் நீதிமன்ற வாதங்களில் சபாஷ் பெறுகிறார். ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் அவர் கையை விட்டு கதாநாயகி, ராஜா, மந்திரி ஆகியோர் வசம் சென்று விடுகிறது. அவர் வெறும் பார்வையாளராக மட்டுமே நிற்கிறார். நடிகர் லால் ராஜாவாக மிரட்டல் நடிப்பை வழங்க, அவரது மந்திரியாக நடிகர் ஆசிப் அலி பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கதாநாயகி ஷான்வி ஸ்ரீவாத்சவ், மிகத்துணிச்சலான இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே அவரை பாராட்டலாம்..

கேமிராமேன் சந்துரு செல்வராஜ் இருவேறு காலத்தில் நடக்கும் காட்சிகளுக்கு நம்பும்படி உயிர்கொடுத்திருக்கிறார். ரொம்பா சுமாரான காட்சிகளுக்குக்கூட வலிமை சேர்க்கிறது இஷான் சாப்ராவின் பின்னணி இசை. ஹிரோயிஸ பில்டப், அரசனுக்கான கம்பீர தீம், காமெடி காட்சிகளுக்கான நையாண்டி என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

இயக்குனர் அப்ரிட் ஷைன் புதுசாக யோசித்தவர் இன்னும் முதிரிச்சியாக யோசித்து கதை பண்ணி இருக்கலாம்.. ! என்னதான் நவீனமயம் என்றாலும் ஒவ்வாதக் காட்சி அமைப்புகளுடன் பிலோ ஆவரேஜ் லிஸ்டில் சேர்ந்து விட்டது.