October 16, 2021

காந்திஜியின் பேரன் கனுபாய் காந்தி மரணம்

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி, உடல்நல குறைவால் காலமானார்.  மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி. இவர்தான் உப்பு சத்தியாகிரகத்தின்போது காந்தியின் தடியை பிடித்துக்கொண்டு முன்னால் சென்ற சிறுவன். இது வரலாற்றில் பதிவான புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. கனுபாய் காந்தி, அமெரிக்கா சென்று படித்தார். பின்னர் அங்கேயே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றினார். இவருக்கு முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் சிவலட்சுமியுடன் திருமணம் நடந்தது. சிவலட்சுமி பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக  பணியாற்றினார்.

gandhi nov 8

ஒருகட்டத்தில் அமெரிக்க வாழ்க்கை வெறுத்த கனுபாய் காந்தி, தன்னுடைய மனைவி சிவலட்சுமியுடன் கடந்த 2014ம் ஆண்டு இந்தியா திரும்பினார். கையில் இருந்த பணமெல்லாம் கரைந்த நிலையில், யாரிடம் உதவி கேட்க விரும்பாமல் ஊர் ஊராக சுற்றித்திரிந்துள்ளனர். அதன்பின்னர் சிலரது உதவியுடன் இருவரும் முதியோர் இல்லத்தில் சேர்ந்தனர். இது பத்திரிகை செய்திகளில் பரபரப்பாக வெளியானது. இந்நிலையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கனுபாய் காந்தி சூரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார். அவரது மனைவி சிவலட்சுமியும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.