January 27, 2023

ரு சினிமாவில் என்னவெல்லாம் எதிர்பார்ப்போம்? நம்பும்படியான சின்னக் கதை, ரசிக்கும்படியான ஜோடி, இனிமையான பாட்டுகள், எதிரிபாராத திருப்பம்,படம் முடிந்து வரும்போது மனதை என்னவோ செய்யும் – இதுதானே? – இதைக் கவனத்தில் கொண்டே பக்காவான ஒரு சினிமாவைக் கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் யு.ஆர்.ஜமீல்!

ஆம்.. மாடர்னாகி விட்ட இச்சூழல் வழக்கப்படி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் நடிகை ஹன்சிகா இந்த விஷயத்தை விமானத்தில் பைலைட்டாக வேலை பார்க்கும் தன் காதலர் சிம்புவிடம் தெரிவிக்க வேண்டும் என்று காத்திருக்க அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒரு வழியாக குழந்தையுடன் மகிழ்ச்சியாக தனியாக வாழும் ஹன்சிகாவிற்கு சைக்கோ கொலைகாரன் மூலம் வருகிறது வினை. தனது ஆசை குழந்தையை பறிகொடுக்கிறார் ஹன்சிகா. தன் காதல் கணவர் சிம்புவுக்கு என்ன ஆனது, தனது குழந்தைக்கு நேர்ந்த கதி என்ன என்பதை தனது திரைக்கதையின் மூலம் அனைவரையும் பரபரப்பாக படம் பார்க்க வைக்கிறார் இயக்குனர்.

ஹன்சிகா நடித்துள்ள 50வது படம் மஹா. ஹீரோயின் மையப்படுத்திய கதை என்பதால் படம் முழுவதும் தோளில் சுமக்க வேண்டிய கட்டாயம். பாரத்தையும் மீறி சுமந்திருக்கிறார். குழந்தையுடன் மகிழ்சியாக விளையாடி ஹன்சிகாவும் ஒரு குழந்தைபோல் மாறிவிடுகிறார். குழந்தை காணாமல்போனதும் பதற்றமடையும் ஹன்சிகா போலீசில் புகார் தருவதும் ஆனால் போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத் துவதால் இவரே தேடுதல் படலத்தில ஈடுபடுவதும் அதற்காக மசூதி, ரெயில்நிலைய .அடையாளத்தை தேடி அலைவதும் சஸ்பென்ஸ். சைக்கோ கொலைகாரனை அடையாளம் கண்டு அவனது ரகசிய அறைக்குள் புகுந்து அவனுடன் சண்டையிட்டு போராடும் காட்சியில் ஹன்சிகா ஆக்‌ஷன் ஹீரோயினாகி விடுகிறார். கஷ்டங்கள், வலியை தாங்கி நடித்திருப்பது காட்சியில் தெரிகிறது.

சிலம்பரசன் டி.ஆர். கெஸ்ட் ரோலில் வருகிறார் அவரது பாத்திரத்தை கனகச்சிதமாக செய்து அசத்தி விடு கிறார். தொடக்க காட்சியிலேயே வம்பு செய்யும் அடாவடி கும்பலை காரில் சேஸ் செய்து வழி மடக்கி அடித்து துவம்சம் செய்வது ரசிகர்களை விசில் பறக்க வைக்கும். பாடல் காட்சியொன்றில் ஹன்சிகாவுடன் நெருக்கம் காட்டியிருப்பது கிக் அதே .போல் இதுவரை தனது காதல் விவகாரம் குறித்து வாய்திறக்காத நிலையில் என்னை காதலித்து ஏமாற்றியவரை மன்னித்து எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறி விட்டேன் என பொடி வைத்து பேசும் காட்சிகள் நிஜத்தின் வெளிப்படாக தெரிகிறது.

ஜிப்ரானின் இசை படத்திற்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது . அதிலும் கொலையாளி வரும் காட்சிகளில் தெறிக்க விடப்படும் பின்னணி இசையில் ஜிப்ரான் ஸ்கோர் செய்துள்ளார். குழந்தைகளை பெற்றோர் எப்படி பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லும் படமென்கிறார்கள்.. அப்படி எல்லாம் நம்ப வேண்டாம்..!

அதே சமயம் எதையும் நினைக்காமல் போய் பார்க்க தகுந்த   என்டர்டெயின்ஸ் மூவியே இது!