மீண்டும் பிண அரசியல் சர்ச்சையில் சிக்கிய மா.ஃபா. பாண்டிராஜன்!

மீண்டும் பிண அரசியல் சர்ச்சையில் சிக்கிய மா.ஃபா. பாண்டிராஜன்!

ழக்கம்போல் மா ஃபா பாண்டியராஜன் பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என அனிதா சகோதரர் மணிரத்னம் தெரிவித்ததுடன் எஸ் பி-யிடமும் புகார் அளித்த நிலையில் அனிதா குறித்த ட்வீட் பதிவு தனது அனுமதியில்லாமல் யாரோ போட்ட பதிவு என்றும் இதுகுறித்து காவல்துறையில் புகாரளிப்பேன் எனவும் அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் கொடுத்துள்ளார்..1

கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று பின்னர் நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் அனிதா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு முறை அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அதிமுகவிற்கு அனிதா ஆதரவு தெரிவிப்பது போல வீடியோ ஒன்றை உருவாக்கி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் அனிதா, வருடத்திற்கு 427 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். இந்த வாய்ப்பு ஜெயலலிதா ஆட்சி தந்திருக்கு. 17 பேரின் வாழ்க்கையை நாசமாக்கின திமுகவை மன்னிச்சிடாதீங்க. உங்கள் கையில் உள்ள விரல் மை எங்கள் வாழ்க்கை மறந்துறாதீங்க, திமுகவை மன்னிச்சிடாதீங்க என பேசுவது போல எடிட் செய்யப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை பார்த்த அனிதா குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை அடுத்து, அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், உங்கள் கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிணத்தை உருவமாக செய்து ஒட்டு கேட்ட அரசியல்வாதி தானே நீங்கள், உங்களிடம் வேற என்ன எதிர்பார்க்க முடியும். இந்த வீடியோவை பார்த்த பிறகு பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என தெரிவித்தார். மேலும் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனிதாவின் சகோதரர் புகார் அளித்தார்.

அந்த வகையில் இந்த வீடியோவிற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீடியோவை தனது ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார். அத்துடன் இந்த பதிவு தனக்கே தெரியுமால் யாரோ போட்டது என்று விளக்கம் அளித்து தன் சார்பிலும் போலீசில் புகார் கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

https://twitter.com/aanthaireporter/status/1378617824126541830

error: Content is protected !!