தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு முழுக்க இருக்கும் பல்வேறு மாவட்ட வாரியாக நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : அலுவலக உதவியாளர் 1912, வாட்ச்மேன் 496, மசால்சி 485, ஸ்வீப்பர் 214, நைட் வாட்ச்மேன் 186, சானிடரி வொர்க்கர் 110, நைட் வாட்ச்மேன் வித் மாசால்சி 123, தோட்ட பராமரிப்பாளர் 28, காப்பிஸ்ட் அட்டென்டர் 3 என மொத்தம் 3557 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: அலுவலக உதவியாளர் பிரிவுக்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மற்ற பிரிவுகளுக்கு தமிழ் எழுத, வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2021 அடிப்படையில் பொது பிரிவினர் 18 – 30, பி.சி., / எம்.பி.சி., 32, எஸ்.சி., / எஸ்.டி., 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, வாய்மொழித்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 2021 ஜூன் 6
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு