சென்னை ஐகோர்ட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டடர் & டைப்பிஸ்ட் ஜாப் ரெடி!

தமிழக தலைநகராம் சிங்கார சென்னையில் அமைந்துள்ள சென்னை ஐகோர்ட் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இங்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் டைப்பிஸ்ட் பிரிவில் காலியாக உள்ள 305 இடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் :
 கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பிரிவில் 76ம், டைப்பிஸ்ட் பிரிவில் 229ம் சேர்த்து மொத்தம் 305 இடங்கள் உள்ளன.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.வேறு பிரிவுகளில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக கம்ப்யூட்டர் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களும் நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். இத்துடன் டைப்ரைட்டிங்கில் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஹையர் கிரேடு முடித்திருக்க வேண்டும். டைப்பிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில டைப் பிங்கில் ஹையர் கிரேடு முடித்திருப்பதுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை
: எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், ஓரல் டெஸ்ட் என்ற அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.300/-ஐ இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்
: 2019 ஜூலை 31.

விபரங்களுக்கு
ஆந்தை வேலைவாய்ப்பு