சென்னை ஐகோர்ட் சீஃப் ஜட்ஜ் தஹில் ரமணி பதவி விலக முடிவு!

சென்னை ஐகோர்ட் சீஃப் ஜட்ஜ் தஹில் ரமணி பதவி விலக முடிவு!

சென்னை ஐகோர்ட் சீஃப் ஜடஜாக  பதவி வகித்து வருபவர் வி.கே.தஹில் ரமணி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி யேற்றுக் கொண்டார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணியை, மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலய மாநில உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை எடுத்துள்ளது.இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்த இடமாற்ற முடிவை மறு பரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி, சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பினார். ஆனால், இந்தக் கோரிக்கையை மூத்த நீதிபதிகள் குழு அண்மையில் நிராகரித்து விட்டது.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தன் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தகவல்வெளியாகியுள்ளது. மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தன்னை நியமித்துள்ள கொலிஜியம் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளார் என்று ஐகோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

இவங்க தான் கடந்த 11 மாசமா தமிழ்நாட்டுக்கு தலைமை நீதிபதியா இருந்தவங்க … இதுக்கு முன்னாடி பாம்பே ஹைகோர்ட்ல பொறுப்பு தலைமை நீதிபதியாக 2015 -17 வரை இருந்தவங்க …

இவங்க தான் குஜராத்ல மோடி ஆசியோட ஆர்எஸ்எஸ் விஹச்பி போன்ற பார்ப்பனிய காவி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட முஸ்லீம்களின் இன படுகொலையில கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தனது கண் முன்னாடியே கைக் குழந்தையையும் தனது மாமனார் மாமியார் உட்பட தனது குடும்பம் மொத்தமும் படுகொலை செய்யப்பட்டதை பார்க்கும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட “பல்கீஸ் பானு” வழக்கை குஜராத்தில் நேர்மையா விசாரிக்க மாட்டாங்கனு உண்மையை உணர்ந்து பாம்பேக்கு வழக்கை மாற்றி விசாரித்து.. பல கொலை மிரட்டலுக்கு அஞ்சாமல்.. ஆசை வார்த்தைக்கு மயங்காக காவி பயங்கரவாதிகளான “ஒரு டாக்குடர், ஒரு போலீசு உட்பட 9 மனித மிருகங்களுக்கு சட்டப்படியான தண்டனை வழங்கிய நீதி தேவதை …

அதுக்கு பிறகு நாட்டின் நான்காவது பெரிய நீதிமன்றமும் பழமையானதுமான நம்ம சென்னை ஹைக்கோர்ட்டு தலைமை நீதிபதியா மாற்றப்பட்டு வந்தாங்க …

இப்போ காவி பாசிச ஆட்சி நடப்பதால் பழிவாங்கலோ அல்லது என்ன ஆச்சுனு தெரியல திடீர்னு மேகலாயா ஹைக்கோர்ட்டுக்கு மாத்திட்டாங்க..

இதுல என்ன பெரிய விஷயம்னா ஒரு காலேஜ்ல புரஃபசரா இருந்தவரை திடீர்னு எல் கே ஜி க்கு பாடம் நடத்துனு அவமானப்படுத்தியதை போல அனுப்பி இருக்கானுங்க ..

75 நீதிபதிகளுக்கு தலைமையா இருந்தவங்க இவங்களுக்கு கீழ நாலு லட்சம் வழக்கு போயிட்டு இருக்கு அப்படிபட்டவரை வெறும் 2 நீதிபதிக்கு தலைமை நீதிபதியா மாத்தியிருக்காங்க அங்க வெறும் 1070 கேசுதான் ஓடிட்டு இருக்கு ….

இதை ஏன் செஞ்சாங்க எதுக்கு செஞ்சாங்கனு யாருமே கேக்க மாட்டாங்க.

error: Content is protected !!