March 21, 2023

ம.பி. மாநில அரசு, சார்பில் சிக்கன், முட்டை,பால் விற்பனை நிலையம்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில  முதலமைச்சர் கமல்நாத், மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும்  முட்டை, பால் மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட சத்துணவு கிடைக்க வேண்டும் என்று முடிவெடுத்து திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன்படி மத்தியப்பிரதேச அரசு சார்பில் கோழி இறைச்சி, பால் மற்றும் முட்டை விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநில அரசால் நடத்தப்படும் சிக்கன் விற்பனை நிலையத்தில், பல்வேறு மருத்துவத் தன்மை படைத்த கதக்நாத் சிக்கன் விற்கப்படும் என கால் நடை வளர்ப்புத்துறை அமைச்சர் லகான் சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநில அரசின், இந்த நடவடிக்கைக்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டு வருகிறது.  அரசே இறைச்சி விற்பது மதவாதத்தை தூண்டும் விதமாக உள்ளது  என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்படுகிறது.