October 19, 2021

ஓ பி எஸ்-ஸை போய் மீட் பண்ணியது ஏன்? – மு க ஸ்டாலின் விளக்கம்!

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று பத்திரிகையாளர்களிடம் ,”முதல்-அமைச்சர் ஜெய லலிதா குணம் அடைந்து வருகிறார். நல்ல உடல் நலத்தோடு இருக்கிறார். விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார். மருத்துவர் குழுவினர் அவ ரது உடல் நிலையை கண் காணித்து வருகிறார்கள்.முதல்-அமைச்சரை பற்றி வதந்திகள் பரப்பப்படுகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். இந்த தருணத்தில் முதல்-அமைச்சர் ஜெய லலிதா விரைவில் பூரண குணம் அடைய பிரார்த்திப்போம்.

mk stalin oct 14

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடக அரசும், மத்திய அரசும் நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது. பொறுப்புக்களை மாற்றி கொடுத்ததற்கு முதல் – அமைச்சர் கையெழுத்து போட்டாரா? என்று கருணாநிதி பேசியிருக்கிறார். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்வார். அவரை முதல்- அமைச்சர் ஆக்கினால் மட்டுமே சும்மா இருப்பார். வருகிற 18-ந்தேதி காவிரி தண்ணீர் பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு நல்ல தீர்ப்பு வர உள்ளது. இந்த நேரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டிய தேவை இல்லை”என்று அவர் கூறினார்.

இதனிடையே காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் நிதி அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் , இடைப்பாடி பழனிசாமி ஆகியோரை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். காவிரி விவகாரம் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியும் வந்தார். ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன்,பொன்முடி எம்.எல்.ஏக்கள் மா.சுப்பிரமணியன் , சேகர்பாபு, ஜெ.அன்பழகன் ஆகியோர் வந்தனர். நேற்று நடைபெற்ற விவசாயிகளிடனான அனைத்து கட்சி கூட்ட தீர்மானத்தை அமைச்சரிடம் ஸ்டாலின் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.மேலும் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 15 நிமிடம் ஆலோசனை நடைபெற்றது. பின்னர் மு.க ஸ்டாலின் பேட்டி அளித்தார் அப்போது அவர் , “நேற்று பலவேறு விவசாய அமைப்புகளுடன் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட தீர்மான நகல்களை அமைச்சர்கள் ஓ.பன்னீர்ச் செல்வம், இடைப்பாடி பழனிசாமியை சந்தித்து அளித்து உள்ளோம். தீர்மானத்தின் படி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்றும், அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து வலியுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டு உள்ளோம். தங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக இரண்டு அமைச்சர்களும் உறுதி மொழி அளித்துள்ளனர்” என்றார்