Exclusive

லவ் டுடே படமும் பெண்ணியமும்!

ன்றைய நவீன தலைமுறை இளைஞர்களுக்கான நவீன காதல் என்று விளம்பரப்படுத்தப்பட்டு விமரிசையாக கொண்டாடப்பட்ட படம் லவ் டுடே. சரி, இளைய தலைமுறைக் காதலைப் புரிந்து கொள்ளலாம் என்று ஆவலாகப் பார்க்க ஆரம்பித்தேன். படத்தில் காதலர்கள் ஈருடல் ஓருயிர் என்று அலைகிறார்கள். ‘உன் கையை நான் பிடிச்சிக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கணும், என்று சொல்லி அந்தப் பெண் அவனுக்கு கையில் காப்பு கட்டி விடுகிறாள். அவன் அவளுக்கு பதிலுக்கு மூக்குத்தி குத்தி விடுகிறான். (மூக்கைப் பிடிச்சிக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கணும்னு நினைக்கிறானா என்று கேள்வி வந்தது. இயக்குனர் பதில் சொல்லவில்லை.) இன்ஸ்டகிராமில் சில ஆண்மகன்கள் இன்பாக்ஸ் இம்சை செய்கிறார்கள் என்றதும், உன் அக்கவுண்ட்டை பிரைவேட்டா வெச்சிக்கோ என்று அறிவுரைக்கிறான். ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் பாட்டுக்கு அவள் டான்ஸ் ஆட, புடவை வழியே அவள் இடுப்பு தெரிகிறது என்று சுட்டிக் காட்டி மூடி குத்திக் கொள்ள ஊக்கு கொடுக்கிறான். ‘இதெல்லாம் லவ் yesterday பாஸ் – today இல்ல!’ என்று சொல்லலாம் என்று நினைக்கும் போது, அவளது அப்பா அவளது ஃபோனில் புளுடூத் இணைத்து அவள் காதலனுடன் பேச்சை ஒட்டுக்கேட்டு அவர்கள் காதலைப் பற்றித் தெரிந்து கொண்டு விடுகிறார்.

சரி லவ் todayவோ, yesterdayவோ, அப்பாக்கள் எல்லாரும் yesterdayவில்தானே வாழ்கிறார்கள் என்று தோன்றியது. ஆனால் ஆச்சரியமான ஒரு காரியம் செய்கிறார். அவர்களை அழைத்து நீங்கள் ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனில் ஒருவர் ஃபோனை இன்னொருவர் 24 மணி நேரம் வைத்துக் கொள்ள வேண்டும், என்று நிபந்தனை விதிக்கிறார். அதில் அவர்கள் இருவரும் வென்றால் திருமணத்துக்கு சம்மதிப்பார். தோற்றால் இரண்டு நாள் கழித்து அவளைப் பெண் பார்க்க தான் ஏற்பாடு செய்திருக்கும் மாப்பிள்ளையை கூட்டி வருவார். வென்றால் திருமணம் ஓகே, புரிகிறது. தோற்றால் அரேஞ்சுடு மேரேஜ்ஜா? அப்போது அவர் பார்த்த புது மாப்பிள்ளையுடைய ஃபோனையும் வாங்கி 24 மணி நேரம் அவளை வைத்துக் கொள்ள சொல்லி நிபந்தனை விதிப்பாரா? என்ற கேள்வி எனக்கு எழுந்தது. அதற்கு இயக்குனர் பதில் சொல்லவில்லை.

நிற்க, ஒருவரின் ஃபோனை, லேப்டாப்பை அல்லது டேப்லெட்டை அவர் சம்மதமின்றி அடுத்தவர் திறந்து பார்ப்பது அந்தரங்க மீறல். Violation of Privacy. அது அப்பா, பெண்ணாக இருந்தாலும், காதலன் காதலியாக இருந்தாலும், கணவன் மனைவியாகவே இருந்தாலும் செய்யக் கூடாத செயல். ஒருவரை இன்னொருவர் முழுமையாக தெரிந்து கொள்வது என்பது ஒரு 24 மணி நேரம் அடுத்தவர் ஃபோனை நோண்டிப் பார்ப்பதில் தெரியாது. ஒருவருக்குப் பிடிக்காத விஷயங்கள் என்ன, பிடித்த விஷயங்கள் என்ன, எப்போது கோபம் வரும், எப்போது சோகமாக ஆவார்கள்? எப்போது வீட்டில் இருக்கும் சாமான்கள் சுவற்றை நோக்கிப் பறக்கும்? போன்றவற்றுக்கு பதில் ஒருவரின் வாட்சப்பில் கிடைக்காது. இணைந்து வாழ்வதில் மட்டுமே தெரியும். அதனால்தான் என்னைப் போன்ற நவீனம் போற்றும் ஆசாமிகள் லிவிங் டுகெதரை தொடர்ந்து பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறோம். காதல் ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேறியதும் காதலர்கள் இணைந்து வாழ்வதுதான் உண்மையான லவ் டுடே என்பது.

அந்த ஃபோன் மாற்று வேலையில் இருவருக்குமே சம்மதமில்லை. இருவரும் அடுத்தவர் ஃபோனை திறக்காமல் தாமதிக்கிறார்கள். அடுத்தவர் திறந்து விடுவார்களோ என்று பதட்டப்படுகிறார்கள். ‘நீ பயப்படுற. புரியுது. உன் ஆளு ஏன் மச்சி பயப்படுறா?’ என்று நாயகனின் நண்பர்கள் கேட்கிறார்கள். நாயகன் அதிர்ச்சி அடைகிறான். அதில என்னப்பா ஷாக்கு? உனக்கு சில முந்தைய காதல்கள், நட்புகள், உறவுகள் இருப்பது போல அவளுக்கும் இருக்கக் கூடாதா, என்ன?

அப்புறம் என்ன? இருவரும் அடுத்தவர் மொபைலைத் திறந்து நோண்டி அவர்கள் கடந்த காலம் குறித்து தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அதற்குப் பின் நாயகன் அவளது ஒரு முந்தைய உறவு குறித்துப் பேசும் காட்சி என்னை கூனிக் குறுக வைத்தது. Toxic masculinity என்ற பதத்துக்கு அர்த்தம் தேவைப்படுபவர்கள் அந்தக் காட்சியை பார்த்தால் முழுவதும் புரிந்து விடும். பாஸ், இது லவ் today இல்லை, yesterday கூட இல்லை, லவ் 19th century என்று கூச்சலிடலாம் போல இருந்தது. இத்தனைக்கும் அந்த நாயகன் வேறு பெண்ணையே நினைத்தும் பாராத ஆள் இல்லை. பல பெண்களுடன் காதல் இருந்தவன்தான். முடிந்த காதல் ஒன்றில் பிரச்சினையாகி அந்தப் பெண் அவனை பிளாக் செய்து விட, அவளை ஒரு ஃபேக் ஐடியில் பின் தொடர்கிறான். பிளாக் செய்த இன்னொரு பெண்ணுடன் ஜிபே மூலம் சாட் செய்ய முயல்கிறான். இதையெல்லாம் சகஜமாக கடக்க முயலும் அவனுக்கு தனது இந்நாள் காதலி தனது முன்னாள் காதலனுடன் நட்பில் இருக்கிறாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் சைக்கோ போல பொங்குகிறான்.

படத்தில் sexual harassmentஐ நெருங்கும் காட்சிகள் மிக சாதாரணமாக காட்டப்படுகின்றன. ஒரு செக்ஸ் சாட்டில் ‘உன்னைப் பதம் பார்க்கணும்,’ என்று நாயகன் வேறு ஒரு பெண்ணிடம் மெசேஜ் விடுகிறான். அதைக் கண்டு கோபப்படும் நாயகியிடம், ‘இதெல்லாம் சும்மா ஃபிரண்ட்ஸ்சுக்குள்ள பசங்க பேசிக்கிறது,’ என்று அலட்சியமாக பதில் சொல்கிறான். அதற்கு அவள் ஒரு நடிகரின் பெயரை சொல்லி ‘அவனைப் பதம் பார்க்கணும்னு நான் மெசேஜ் அனுப்பினா உனக்கு ஓகேவா?’ என்று கேட்கிறாள். நாயகனிடம் இருந்து பதில் வருவதில்லை. இயக்குனரிடம் இருந்தும்தான்.
நடிப்பு வாய்ப்புத்தருகிறேன் என்ற போர்வையில் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் அணுகுமுறைக்கு Casting Couch என்று பெயர். அப்படிப்பட்ட காட்சிகளும் படத்தில் தமாஷாக காட்டப்படுகின்றன. பாலியல் ரீதியில் ஆணோ, பெண்ணோ இணையத்தில் மிரட்டி பணம் பறிக்கும் குற்றத்துக்கு Sextortion என்று பெயர். இதுவும் கூட தமாஷாக காட்டப்படுகிறது.

கடைசியில் அதுவரை ஜோக்கர் மாதிரி சுற்றிக் கொண்டிருந்த நாயகனின் அம்மா திடீரென ஆழமான ஒரு அறிவுரை வழங்கி அவனது அறிவுக் கண்ணைத் திறந்து விடுகிறாள். உடனே அன்பு பொங்க அந்தப் பெண்ணை ‘ஏற்றுக்’ கொள்கிறான். கணவன் மனைவி பரஸ்பரம் நம்பிக்கை கொள்வது பற்றி ஆடியன்ஸ்சுக்கு ஒரு அறிவுரையுடன் படம் முடிகிறது. இந்த மாதிரி அறிவுரை மெசேஜ் எல்லாம் எண்பதுகளின் படங்களில்தான் கடைசியில் ஒரு ஸ்லைடு போட்டு காட்டப்படும். எனவே படத்துக்கு ‘லவ் 80ஸ்’ என்றும் பெயர் வைத்திருக்கலாம். இவற்றின் காரணமாக படத்தின் தலைப்பு நினைக்க நினைக்க ஆச்சரியம் தருகிறது. இதுதான் இன்றைய நிஜ நிலவரம் என்றால் முந்தைய காலகட்டதில் இருந்து பெண்கள் நிறைய மாறி விட்டார்கள். ஆண்கள் கொஞ்சமும் மாறவே இல்லை என்பதுதான் படத்தில் எனக்குக் கிடைத்த சேதி.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

aanthai

Recent Posts

“பத்ம பூஷன் ” வாணி ஜெயராம் திடீர் மறைவு : தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு.

பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…

11 hours ago

ரன் பேபி ரன் – விமர்சனம்!

பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…

1 day ago

அதிமுக & இரட்டை இலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…

2 days ago

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் & ரூ.25 ஆயிரம் அபராதம் – புதுவை போலீஸ் அறிவிப்பு

நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…

2 days ago

பொம்மை நாயகி -விமர்சனம்!

இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல்…

2 days ago

ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு செயலியும், இன்ன பிறவும்!

இந்தாண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக ChatGPT மாறியுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட்…

2 days ago

This website uses cookies.