October 25, 2021

விண்வெளியில் தொலைந்து போன இந்தியாவின் சந்திரயான் விண்கலம் – நாசா கண்டறிந்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மைல் கல்லாக கருதப்படும் சந்திரயான்-1 செயற்கைக்கோள் ஏவப்பட்ட 8வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம். பூமியின் துணைக்கோளான சந்திரன், பூமியிலிருந்து பல ஆயிரம் மைல் தொலைவிலுள்ளது. அங்கு மனிதர் வாழ உகந்த சூழல் உள்ளதா, குறிப்பாக காற்றும், தண்ணீரும் உள்ளதா என்பது குறித்து அமெரிக்கா, ரஷ்யா ஆகிய, முன்னேறிய நாடுகள் ஏற்கனவே ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன.

NASA MAR 10

நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என தனது விண்வெளி ஆய்வு குறித்து அமெரிக்காவும் பெருமைப்பட்டுக் கொண்டது. இந்நிலையில், சந்திரனை ஆராயும் திட்டத்தில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இணைந்தது, உலக நாடுகளை மூக்கின் மீது விரலை சுட்ட செய்தது. சந்திரனுக்கு ஒரு பயணம்.. என்பதுதான் சந்திரயான் பெயரின் பொருள்.

ஆம்.. நிலவினை குறித்து ஆராய்வதற்காக சந்திரயான் – 1 என்னும் விண்கலத்தை 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா ஏவியது. அந்த நிலவினைக் தொலைவு உணர்வு முறையில் வெவ்வேறு சூழ்நிலைகளில் ஆராய்வதற்காகவும், வேறுபட்ட தொலை நிலைகளில் புகைப்படங்கள் எடுத்து நிலவு பற்றிய ஒரு முப்பரிமான வரைபடம் ஒன்றை உருவாக்குவதுமே இதன் அடிப்படை நோக்கமாகும். ஆனால் சில ஆரம்ப கட்ட தகவல்களுக்குப் பிறகு ஆகஸ்ட்-2009 முதல் சந்திரயானுடனான ரேடியோ தகவல் தொடர்பு முற்றிலும் நின்று போனது.

இந்நிலையில் தற்போது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்ணில் தன்னுடைய புதிய வகை நில ஆய்வு ரேடார் ஒன்றை பயன்படுத்தி சந்திரனைச் சுற்றி வரும் இரண்டு ஆளில்லா விண்கலங்களை கண்டறிந்துள்ளது. அவை அமெரிக்காவின் ‘லூனார் ரிகன்னசைன்ஸ் ஆர்பிட்டர்’ மற்றும் சந்திரயான் -1 ஆகிய இரண்டுமாகும். அளவில் மிகச் சிறியதான இந்தியாவின் சந்திரயான் -1 விண்கலத்தை மீண்டும் கண்டறிந்தது ஒரு முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட தகவல்களை நாசாவின் விண்வெளி ஆய்வு மைய ரேடார் விஞ்ஞானி மரீனா ப்ரோசோவிக் தெரிவித்துள்ளார்.