தமிழகத்தில் லண்டன் கிளைமேட்! – வானிலை இயக்குநர் தகவல்

பல்வேறு விஷயங்களை வெளிநாட்டுடன் ஒப்பிட்டு பேசும் நம்மாடகளை கூல் செய்யும் விதத்தி அண்மையில் வந்த ரிப்போர்ட் இது : அதாவது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தற்போது கடும் வெயில் அடித்து வருகிறதாம். அங்கும் கோடைக்காலம்தான் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது என்ரு புலம்புகிறார்கள். அதிகபட்சமாக மேற்கு லண்டன் பகுதியில் 27.9 செண்டிகிரேட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது என்றும் 1949-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த அளவுக்கு வெயில் அடிப்பது இதுவே முதன்முறையாகும் என்றும் சொல்கிறார்கள். பெரும்பாலும் குளிரில் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட லண்டன் வாசிகள் வெயிலின் தாக்கம் தாங்காமல் குளிர் பிரதேசங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நம் தமிழகத்தில் அரசியல் சூட்டுக்கு இணையாக கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே இன்று (சனிக்கிழமை) நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “வெப்பச்சலனம் காரணமாக உள்தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆந்திராவில் வீசும் வெப்பக்காற்றை பொறுத்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம்  அதிகமாக இருக்கும். இந்திய அளவில் கடந்தாண்டைவிட இந்த ஆண்டு 90% அளவுக்கு மழை இருக்கும்” என பாலச்சந்திரன் தெரிவித்தார்.