December 1, 2021

இன்னும் இரண்டு வாரம் ஊரடங்கு: மத்திய அரசின் புது ஆணை முழு விபரம்!

கொரோனா வரைஸால் முடக்கப்பட்டுள்ள நாடு முழுவதும் இன்னும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே சமயம் , மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங் களைப் பொறுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாடு முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் இயல்பான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப் படுகிறது.சிவப்பு மண்டலங்களில் விமானம், ரயில், மெட்ரோ மற்றும் சாலைப் போக்கு வரத்துக்கு தடை நீடிக்கப்படுகிறது. எனினும், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ள விஷயங்களுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்கும் விமான, ரயில், சாலைப் போக்குவரத்து வழியாக தனி நபர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

சிவப்பு மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கால் டாக்சி, ஆட்டோ ரிக்ஷா இயங்கத் தடை தொடரும். மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடரும். சிவப்பு மண்டலங்களில் நான்கு சக்கர வானங்களில் ஓட்டுநர் உள்பட இருவர் பயணிக்கலாம். இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

ஆரஞ்சு மண்டலங்களில் கால் டாக்சி இயங்கலாம். ஆனால், ஓட்டுநருடன் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் மற்றொருவரும் பயணிக்கலாம். மாவட்டங்களுக்கு இடையே தனி நபர்களோ, வாகனங்களோ அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு செல்லலாம்.

பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம். பஸ் டெப்போக்களில் 50% பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் மத்திய அரசின் புது ஆணையின் சாராம்சம் இவைதான்!

இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.

சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்.

முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது.

மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.

பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது.

ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள், வழிப்பாட்டு தலங்கள், ஏராளமானோர் கூடும் பொது நிகழ்வுகளுக்கான தடை தொடரும்

நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை நடத்துவதற்கு அனுமதி.

கிராமப்பகுதிகளில் அனைத்து வகையான சிறு கடைகளையும் திறப்பதற்கு அனுமதி.

தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுடன் நகர்புறங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.

சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். ஏனைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி என்ற வகையில் செயல்பட வேண்டும்-

.

சிவப்பு மண்டலங்களில் 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம்.

சிவப்பு மண்டலங்களில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி.

கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம்.

மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.

4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 2 பேரும் செல்லலாம்

பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை.

பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துங்களை இயக்க அனுமதி-.

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படவும் 2 வாரம் தடை நீட்டிப்பு;

சரக்கு வாகனங்கள் இயங்கலாம்; எந்த மாநில அரசும் தடை செய்யக் கூடாது