2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 77.73 சதவீத வாக்குகள் பதிவு!

2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 77.73 சதவீத வாக்குகள் பதிவு!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிகளின் 46 ஆயிரம் பதவிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (டிச.30) காலை 7 மணிக்கு துவங்கியது.காலை 9 மணி வரை 10.41 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 11 மணி நிலவரப்படி 25.81 சதவீதமும், பகல் 1 மணி நிலவரப்படி 45.76 சதவீதமும், பிற் பகல் 3 மணி நிலவரப்படி 61.45 சதவீதமும் பதிவாகி இருந்தது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. 77.73 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, 27 மாவட்டங்களில் உள்ள, 91 ஆயிரத்து, 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முதற்கட்ட ஓட்டுப்பதிவு, 156 ஊராட்சி ஒன்றியங்களில், இம்மாதம், 27ம் தேதி நடந்து முடிந்த நிலையில். இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.இன்று காலை, 7:00 முதல், மாலை, 5:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. மாலை, 5:00 மணிக்கு முன், ஓட்டுச்சாவடிகளுக்கு வருபவர்களுக்கு, ‘டோக்கன்’ வழங்கப்பட்டு, ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

தேர்தலை அமைதியாக நடத்த, 63 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். 30 இடங்களில் மறு ஓட்டுப்பதிவு ஒன்பது மாவட்டங்களில் உள்ள, 30 ஓட்டுச் சாவடிகளில், நாளை மறு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. திருவள்ளூர் , தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, பெரம்பலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், துாத்துக்குடி மாவட்டங்களில் பல ஓட்டுச் சாவடிகளில் குளறுபடிகள், வன்முறைச் சம்பவங்கள் நடந்ததால், நாளை (டிச.31) ஒன்பது மாவட்டங்களில் 30 ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.மறு ஓட்டுப்பதிவு, நாளை காலை, 7:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது. அங்கு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!