இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ஆகிறார் லிஸ் டிரஸ் – ரிஷி சுனக்கை வீழ்த்தினார்!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ஆகிறார் லிஸ் டிரஸ் – ரிஷி சுனக்கை வீழ்த்தினார்!

ந்த கால தி கிரேட் பிரிட்டன் எனப்படும் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பிரிட்டனின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைக்கான தேர்தல் அண்மையில் முடிந்திருந்தது. இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமராக லிஸ் டர்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா விதிமுறைகளை மீறி பிரதமர் அலுவலகத்தில் மது விருந்து நிகழ்ச்சிகளை நடத்திய விவகாரத்தில் சொந்த கட்சியான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பிரதமர் மற்றும் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கியது. பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார்.

அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் கடந்த சில வாரங்களாக தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்து வந்தனர். இந்த வாக்கு பதிவு அண்மையில் முடிவடைந்தது. தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில், அப்படி நிகழ்ந்தால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு வலுப்படும் எனக் கருதப்பட்டது.

இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான தேர்தல் கன்செர்வேட்டிவ் கட்சிக்குள் நடந்து முடிந்த நிலையில், இன்று பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்பதை பிரிட்டன் மகாராணி எலிசபெத் முறைப்படி அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக், லிஸ்டர்ஸ் ஆகியோர் முன்னிலையிலிருந்த நிலையில் இவர்களில் லிஸ் டர்ஸ் பிரிட்டனின் அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில், ரிஷி சுனக்கிற்கு, 60 ஆயிரத்து 399 வாக்குகளும், லிஸ் டிரஸ்ஸிற்கு 81 ஆயிரத்து 326 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லிஸ் டிரஸ் வீழ்த்தி பிரிட்டன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்வாகி உள்ளார்.

error: Content is protected !!