லிவ்விங் டுகெதர் சர்ச்சையா? கோர்ட் பக்கம் வராதீங்க- ஐகோர்ட் அதிரடி!

லிவ்விங் டுகெதர் சர்ச்சையா? கோர்ட் பக்கம் வராதீங்க- ஐகோர்ட் அதிரடி!

ட்டப்படி திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழும் ஜோடிகள் குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர சட்டப்பூர்வ உரிமையில்லை என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி தெளிவுபடுத்தினார்.

வெளிநாடுகளில் பரவலாக இருந்து வரும் ‘லிவிங் டுகெதர்’ (living together) கலாச்சாரம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. குழந்தைப் பருவத்தைத் தாண்டிய இருவர் திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழும் முறையே லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையாகும். தற்போது கலப்புத் திருமணம் போன்றவற்றிற்கு ஆதரவு பெருகும் நிலையில், இன்றைய நாள் வரை லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு எதிர்ப்புகள் உள்ளது என்பதே உண்மை. அனைத்து சமூகத்திலும் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்வது அல்லது அவரவர்களுக்கு பிடித்த ஆண்/ பெண்ணை வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொள்வது தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இச்சூழலில் கல்யாணம் செய்துக் கொள்ளாமல் ஜோசப் பேபி என்பவருடன் இணைந்து வாழ்ந்து வந்த கலைச்செல்வி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது தனது இணையரான ஜோசப் பேபியுடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி கலைச்செல்வி வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் (Living Together) குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர சட்டப்பூர்வ உரிமையில்லை என்று தெரிவித்துள்ளது. சட்டப்படி திருமணம் செய்து வாழ்ந்து வருபவர்கள் மட்டுமே, சட்ட உரிமைகளைப் பெறுவதற்காக குடும்பநல நீதிமன்றங்களை அணுக முடியும். சட்டப்படி திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழ்வது அவரவர் தனியுரிமை என்னும் பட்சத்தில், ஒன்றாக இணைந்து வாழ்ந்ததன் அடிப்படையில் மட்டுமே எப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக, சில ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொள்ளாமல் ஆண், பெண் சேர்ந்து வாழ உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட் ஒரு முக்கியமான வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு லிவிங் டுகெதர் உறவு தொடர்பான ஒரு மைல்கல் தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!