போலி மருந்து தயாரித்தாலோ, விற்றாலோ ஆயுள் தண்டனை! – புதுச் சட்டம் தயார்!

போலி மருந்து தயாரித்தாலோ, விற்றாலோ ஆயுள் தண்டனை! – புதுச் சட்டம் தயார்!

போலி மருந்து, மாத்திரைகளை தடுக்க மத்திய அரசு அவ்வப்போது எச்சரிக்கை கொடுத்துக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில், முன்னரே அனைத்து மருந்து மற்றும் மாத்திரைகளில் பார்கோடு அச்சிடப்பட வேண்டும். அவ்வாறு அச்சிடப்பட்டும் பார்கோடில் மருந்தின் பெயர், தயாரிப்பாளர், சந்தை விலை, தயாரிப்பு, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். பார்கோடு இல்லாத மருந்துகள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்வோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தும் அந்த அடாவடி போக்கு தொடரும் நிலையில் போலி மருந்து உற்பத்தி செய்கிறவர்களுக்கும் அவற்றை விற்பவர் களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் 2020 மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது என்று செய்தி வெளியாகி இருக்கிறது..

இந்திய மருந்துகள் மற்றும் அழகுப் பொருள்கள் சட்டப்படி தரக்குறைவான மற்றும் போலியான மருந்து வகைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் மட்டுமே தண்டனை பெறும் வகையில் ஏற்கனவே சட்டம் இருந்தது. இதனால் தரக்குறைவான அல்லது போலியான மருந்துகளை விற்பனை செய்யும் அமைப்புக்கள் தண்டனையில் இருந்து தப்பி வந்தன. இந்த நிலை பொருத்தமற்றது, அதனால் போலி மருந்து விற்பவர்களும் மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என 2018 ஆம் ஆண்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் கருத்து தெரிவித்தார்.

அதனை ஏற்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சட்டத்தை திருத்தியது. புதிய சட்ட திருத்த படி மருந்துகளை உற்பத்தி செய்கிறவர்களும் அவற்றின் விற்பனையாளர்களும் தரக்குறைவான மருந்துகளுக்கும் போலியான மருந்துகளுக்கும் உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டும். இந்த சட்டத்திருத்தம் வரும் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வருகிறது

அதனால் தரக்குறைவான மருந்துகளை உற்பத்தி செய்யும் மருந்து கம்பெனிகளும் விற்பனை செய்யும் மருந்து கம்பெனிகளும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

போலியாக மருந்துகளை உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கும் விற்பனை செய்யும் கம்பெனிகளுக்கும் ஆயுள் தண்டனை விதிக்க புதிய திருத்தப்பட்ட சட்டம் வகை செய்கிறது.

error: Content is protected !!