October 20, 2021

பெண்களின் சராசரி ஆயுட்காலம் 90 வயசாம்!

பெண்களை விட ஆண்களுக்கு ஆயுள் குறைவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று . அப்படி ஆண்களில் ஆயுள் எதனால் குறைகிறது என்பதை பிரிட்டனில் “உப்சலா’ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருந்தனர். அதாவது உயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்லினுள்ளும் 46 குரோமோசோம் உள்ளன. இந்த குரோமோசோமின் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வளை போன்ற நுண்ணிய துணுக்களான நியூக்ளிக் அமிலங்கள் அதாவது டி.என்.ஏ. (D.N.A.) (டி ஒக்ஸிரிபோ நியூக்ளிக் அசிட்) உள்ளன. உலக அளவிலான ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று வயது முதிர்ந்த ஆண்கள் 1600 பேரின் இரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்தனர். ஆய்வில் பங்கேற்ற அனைவருக்கும் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களில் yகுரோமோசோம் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. இதனாலேயே ஆணின் ஆயுள் குறைகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் y குரோமோசோம் பாதிக்கப்பட்டு வருவதன் காரணமாக எதிர்காலத்தில் ஆண்குலமே அழிந்துபோகும் என்று அதிர்ச்சியூட்டி இருந்தார்கள் விஞ்ஞானிகள். –

lady feb 23

இதனிடையே லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வு குழுவினர் தற்போது ஆய்வு ஒன்றை நடத்தி கணிப்பை வெளியிட்டுள்ளனர்.பெண்களின் சராசரி ஆயுட்காலம் தொடர்பாக 35க்கும் மேற்பட்ட வளர்ந்த நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அவர்களது முழு ஆய்வுக் கணிப்பு லான்செட் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் இதோ-

தற்போது வளர்ந்து வரும் நவீன மருத்துவ உலகில் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. 2030-களில் தென் கொரிய நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் அதிகமாக இருக்கும் அமெரிக்க பெண்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருக்கும்..

ஆண்களை விட பெண்களே அதிக சராசரி ஆயுளுடன் வாழ்ந்து வருகின்றனர். அதில், தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின் நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் 88 வயதை எட்டக்கூடும் என்றும், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் 84ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், அங்குள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் குறைந்து வருவதாகவும் இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.