அம்பானிகளும், அதானிகளும் ரயில் விடட்டும், இன்னும் என்னென்ன நடக்கிறதென்று பாருங்கள்!

அம்பானிகளும், அதானிகளும் ரயில் விடட்டும், இன்னும் என்னென்ன நடக்கிறதென்று பாருங்கள்!

வெஸ்ட் பெங்கால் ஜல்பாய்குரி டிஸ்ட்ரிக்கில் உள்ள பனார்ஹட் நக்ராகடா ரூட்டில் நேற்று முன் தினம் காலை சிலிகுரி- துப்ரி இடையே இன்டர்சிட்டி ரயில் போய் கொண்டிருந்தது. அப்போ யானை ஒன்று தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்யும் போது. யானை மீது ரயில் வேகமாக மோதிடுச்சு. இதனால் அந்த யானை 30 மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டது. இதுலே யானையின் உடல் முழுவதும் படுகாயமடைந்தது. இதனால் ரயிலின் எஞ்சின் பகுதியும் சேதமடைந்தது. உடம்பில் ஏராளமான சிராய்ப்புகளுடன் ரத்தம் சொட்ட சொட்ட அந்த யானை தவழ்ந்து சென்றது. அப்பாலே ஒரு மரத்தின் அருகே எழுந்து நின்றது. இந்த காட்சியை ரயில் பயணிகள் வீடியோவாக எடுத்தனர். மிகவும் அழகாக கம்பீரமாக நடந்து வரும் யானை இப்படி தவழ்ந்ததை கண்டு பயணிகள் கண்கலங்கினர். விபத்து நடந்த பகுதியானது யானைகள் நடமாடும் பகுதியாகும். காயமடைந்த பெண் யானையை வனத்துறை அதிகாரிகள் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். அன்றைய தினம் முழுவதும் அவ்வழியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுச்சு. இந்த யானைக்கு உள்காயம் அதிகமாக இருந்தது. இதனால் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போச்சு. இதனால் வனத்துறையினர் மட்டுமல்லாது இதை கேள்விப்பட்ட ரயில் பயணிகளும், வீடியோ கண்ட நெட்டிசன்களும் வேதனை அடைஞ்சிருக்காங்க..!

இந்நிலையில் எஸ். பி. உதயகுமார் எழுதிய பதிவிது :

பெண் யானைகளுக்கு காடுகளில் கூடுதல் பொறுப்புகள் இருக்கின்றன! தாய் வழி சமூகத்தின் தலை யாய உயிரினமாக யானைகள் இன்றும் வாழ்கின்றன! குடும்பத்தை கட்டுக்குலையாமல் பாதுகாக்க பெண் யானைகளால் தான் முடியும்! வலசைப்பாதைகளில் உணவும், தண்ணீரும் உள்ள இடங் களை ஞாபக அடுக்குகளில் நழுவாமல் வைத்திருக்கின்றன பெண் யானைகள்! காட்டின் ஆதார உயிராக உள்ள யானைகளின்வழித்தடங்களில் வளர்ச்சியின் அடையாளமாக காட்டை நடுவே பிளந்து அமைக்கப்பட்ட தொடர் வண்டிப்பாதைகள் யானைகளின் வாழ்வை அகாலமாக்கி யிருக்கின்றன! மரணத்தின் குறியீடாக தொடர் வண்டியின் ஓசை காட்டின் அமைதியை, காட்டுயிர்களின் வாழ்வை அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன! அக், 02- முதல் 08- வரை உலக வன உயிர்கள் பாதுகாப்பு வாரம் என்று உணர்த்தினாலும் செப், 27- ஆம் நாள் காலை 08-30 – மணியை மறக்க முடியவில்லை! ஊடகங்களில், சமூக வலைத்தளங் களில் பார்க்கப்பார்க்க இதயம் நொறுக்குகிறது!

குடும்பத்தின் இருப்பைத் தேடி அந்த இரும்புப்பாதையை கடக்க முயன்ற பெண் யானை ஒன்றை மோதிச் சாய்க்கிறது தொடர்வண்டி. மேற்கு வங்கம் சிலிகுரியிலிருந்து துப்ரி வரை செல்லும் பனார் ஹட் – நக்ராகடா இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் வழியை கடக்கும் பெண் யானையை கவனிக்காமல் மோதித்தள்ளுகிறது, புரட்டிப்போடுகிறது, உடம்பில் உள்ள எல்லா எலும்புகளும் நொறுக்க யானையின் உயிர்மூச்சு, தொடர் வண்டியின் பெரு மூச்சில் கரைகிறது, யானையின் உடம்பில் வழிந்த ரத்தத்தை தொடர்வண்டியில் கசிந்த டீசல் நக்கிக் குடிக்கிறது!

காட்டில் 25- கி.மீ வேகத்தில் பயணிக்க வேண்டிய தொடர்வண்டிகள் 60- கி.மீ வேகத்தில் பயணிக் கின்றன. ரயில்வே நிர்வாகம் இது குறித்து என்றைக்கும் கவலைப்பட்டதில்லை! நாம் கவலைப்பட வேண்டும்! யானைகளின் மரணத்தை இயற்கை சகித்துக்கொள்வதில்லை! பல்லாயிரம் டன் எடையுள்ள தொடர் வண்டி ஒரு யானையை நசுக்கி, பிழிந்து, சக்கையாக்கியபிறகும் 33- மணிநேரம் குற்றுயிரும் குலையுயிருமாய் போராடி இயற்கையின் மடியில் உயிர் கரைந்த யானைக்காக ரத்தமும், சதையும் கொண்டு உயிர் வாழும் நாம் அழுதாக வேண்டும்! எந்திரங்கள் ஒரு போதும் அழுவதில்லை! அவைகள் துருப்பிடித்து இற்றுப்போகட்டும்!

(அம்பானிகளும், அதானிகளும் ரயில் விடட்டும், இன்னும் என்னென்ன நடக்கிறதென்று பாருங்கள்!)

error: Content is protected !!