எம்.எல்.ஏ.க்கள் நேரில் வந்து ராஜினாமா கொடுக்கோணும்!- கர்நாடகா சபாநாயகர் அறிவிப்பு!

எம்.எல்.ஏ.க்கள் நேரில் வந்து ராஜினாமா கொடுக்கோணும்!- கர்நாடகா சபாநாயகர் அறிவிப்பு!

கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் நிலுவையில் உள்ளதால் 13 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று அம்மாநில பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ்குமார், 13 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களும் பரிசீலனையில் உள்ளன. எனவே, அவர்களை தற்போது தகுதி நீக்கம் செய்ய முடியாது. ராஜினாமா கடிதம் அளித்த 13 பேரில் 8 பேரின் கடிதங்கள் சட்டப்படி இல்லை. எனவே அதனை ஏற்க முடியாது. 5 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் முறைப்படி இருப்பதால் அவர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும்.

ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கும் எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், ஆளும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் 13 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்றும் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கும் எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால் இதுவரை ஒரு எம்எல்ஏவும் என்னை சந்தித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்கவில்லை, ஒருவேளை எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்படுகிறார்கள் என்பது ஆதாரத்துடன் தெரிய வந்தால், ராஜினாமாக்கள் ஏற்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!