February 8, 2023

ஜெ.ஜெ. வாழ்வு சொல்லித் தரும் பாடம்..!

கார்பரேட் முதல் கொண்டு பல இடங்களில் சக மனிதர்களை வாரிவிடும் சுயநலம் நம் நாட்டில் மிக அதிகம். முக்கியமாய் வெளிநாட்டில் இருந்து வரும் யாருக்கும் சொல்லும் ஒன்றுதான். உங்களால் Work Culture அங்கு பழகிவிட்டு இங்கு தாக்குப்பிடிப்பது கடினம் .அது முடியாமல் பலர் திரும்பி போவதை கவனிக்கிறேன் என்று சொல்லுவேன் சில நிகழ்வுகளுக்காக சினிமா மனிதர்களை கண்டு அரண்டுவிட்டேன். நான் சொல்வது பத்து வருடங்கள் முன். முதன் முதலில் அப்படிப்பட்ட மனிதர்களை சந்திக்கிறேன். சிவில் வேலைகளில் நடக்கும் ஏமாற்றங்கள் பார்த்து பழகியவள்தான். லேபர் காண்டாரக்டில் இரு நாளில் முடியும் வேலை நம் சம்பளம் எனில் பத்து நாட்கள். நம் மெட்டிரியல் எனில் வேறுவிதம் அவர்கள் மெட்டிரியல் எனில் கதையே வேறு எனச்செல்லும். அதும் முழு காண்டாராக்டில் வரும் பில்களில் செவ்வாய் கிரகத்தில் கூட குடிபெயரலாம். இதெல்லாம் சமாளித்தே பெங்களுரில் சிவில் வேலைகள் செய்தேன்.

எல்லாத்துறைகளிலும் சிக்கல் இருக்கு. அதே சமயம் உழைப்பு, திறமை இருப்பின் மேல் வரலாம். இருந்தாலும் ஒருவரை ஒன்றுமில்லாமல் ஆக்கி அவரின் பெயரை கெடுத்து மேல் வருவது சினிமா மற்றும் அரசியல்.. அதுவும் சினிமாவில் சில கடைந்தெடுத்த சுயநலங்கள் வார்த்தைகளில் தேன் தடவி வருவதை பார்த்து பயந்தே போனேன். அதெல்லாம் மீறிதான் அதிலும் பிழைக்கிறார்கள்..ஆள் பார்த்துப்பாங்க. அதும் நிஜம். அதனால்தான் வாரிசுகளுக்கு பயமில்லை.. ஒரு நடிகை இன்று அரசியல்வாதி சொன்னார், சென்றவுடன் அவர் ஆள் என எஸ்டாபிளிஷ் செய்ததால் எனக்கு சிக்கல்கள் குறைவு என்று..அப்படி எனில் தனிமனிதர்களின் சிக்கல்களை யோசித்துக்கொள்ளலாம்.

இது சினிமா..அதை விட மோசமான ஒன்று அரசியல். தனிப்பட்ட வாழ்வில் ஏர்போர்ட் செக்யூரிடியில் சந்தேகம் இருப்பின் எப்படி வேணாலும் துழாவலாம், அவிழ்த்து காட்ட சொல்லலாம்..அதுப்போல்தான். எல்லாவற்றையும் துழாவும் புத்தி. அதும் அடுத்தவர்களை. துழாவி மட்டுமில்லை. நம் பையில் போட்டுவிட்டு பார் இவர் தவறு என்று சொல்லும் புத்தியும், திட்டமிட்டு கவிழ்க்கும் புத்தியும் உண்டு. நேரடியாக அரசியலை சமீப நாட்களாய் எல்லா தரப்பிலும் கவனிக்கிறேன். அடுத்த கட்சியில்கூட நட்பு வைக்க முடியும். தன் கட்சியினரை பெரும்பாலும் நம்ப முடிவதில்லை. இங்கு சினிமாவை விட மோசம் .

சான்ஸ் என்பது ஆயிரத்தில் ஒருவருக்கு கூட கிடைக்காது. அத்தனை எளிதல்ல. அடிமட்ட தொண்டர்கள் கடைசிவரை தொண்டர்கள்தான். மேல்மட்ட அரசியலாளர்கள் மேல் மட்டத்தில். உழைத்து மேல் வருவது எல்லாம். பெரும்பாலும் கனவுதான். உழைக்கலாம். சினிமாவை விட அரசியலில் மிக கடினம். நம் திறமைக்கு அங்கிகாரம் கிடைக்கும் நேரத்தில் கூட இருப்பவனே போட்டுக்கொடுத்து காலி செய்வான். இவன்/ இவள் நம்மை விட மேல் வந்துடுவாரோ என்ற சந்தேகம் பலருக்கு ஓடும். தூக்கமே வராது மிகச்சிலரே உழைப்புக்கும், திறமைக்கு அங்கிகாரம் தருவர்.

இப்படி அரசியல் செய்து செய்தே மேலே வருபவர்கள் சக மனிதனை எந்தளவு நேசிப்பார்கள்? சமூகத்தை? விசுவாசமாவது .ஏதாவது..ம்ஹூம்..
அதையும் தாண்டிதான் சிலர் உள்ளனர். அரசியலுக்கு செல்லும் முன் நம் பொருளாதாரத்தை வலுவாக்கிக்கொண்டு நாம் அதற்குள் செல்வதால் குடும்பத்துக்கு சிக்கல் இல்லை எனில் செல்லலாம் .நிஜமான மாற்றம் நோக்கி மனம் ஏங்க வேண்டும். சுயநல வாதிக்ள் பேசாமல் பிசினஸ் செய்து சம்பாதிக்கலாம். ஏன் எனில் தன் குழந்தைகள் மோசமான சமுகத்தில் வளர்வதை எந்த திருடனும் , கொள்ளைகாரனும் கூட விரும்பமாட்டான்.

அரசியலில் இருப்பவர்கள் ஜெ.ஜெ பார்த்தாவாது திருந்த வேண்டும். நம் மனம் வலிக்கிறது. கண்ணிர் விடுகிறோம். துரோகம் பார்த்து அதிர்ச்சியாகிறோம். அதே கட்சியினர் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள் எனில் அரசியலில் எந்தளவு சுயநலம் ஊடுருவி உள்ளது என கவனிக்கலாம். இது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும். விசுவாசம் எல்லாம் பேச்சளவில்தான்..அவனவனுக்கு ஆயிரம் வேலை. விசுவாசம் காட்ட நேரமில்லை.. அன்பாக சிலர் இருப்பார்கள். அது சிலர். அன்பின் கூட்டம் கூட இருப்பதை மறுப்பதில்லை..அதெல்லாம் அரிதுதான்.

கொலை செய்தால் கூட, எத்தனை பெரிய ஆளாக இருப்பினும் அரசியலில் கேள்வி கேட்க ஆளில்லை..கொலை செய்தவர்கள் மாட்டிக்கொண்டாலும் காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள. அதும் நிஜம் இதான் அரசியல். இதில் சம்பாதிப்பதற்கு பதில் பிசினசில் சம்பாதித்தால் நிம்மதியாவது மிஞ்சும். சுயநலவாதிகள் அரசியலில் இருந்து காலியானால் மட்டுமே தலைமுறை வாழும். இல்லை எனில் கொலைக்கும் அஞ்சா அரசியல்கள் வாழ்வதுப்போல் வீழும்..அது தொடரும் .

அதுவே ஜெ.ஜெ வாழ்வு சொல்லித்தரும் பாடம்

வீழ்வோமா? வாழ்வோமோ?

கீர்த்தி