லெபனான் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது!

லெபனான் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது!

தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரேல், சிரியா உள்ளிட்ட நாடுகளை அண்டை நாடாக கொண்ட லெபானானில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடைசியாக 2009-ம் ஆண்டு லெபனானில் தேர்தல் நடந்தது. அடுத்த நான்கு ஆண்டில் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், அண்டை நாடான சிரியாவில் ஸ்திரமின்மை இல்லாததால், இரண்டு முறை நாடாளுமன்றத்தின் காலம் நீட்டிக்கப்பட்டதையடுத்து பல ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பாராளுமன்ற தேர்தல் தொடங்கி  உள்ளது.

128 இடங்களுக்கான வாக்குப்பதிவுகள் சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது. பல்வேறு மாற்றங்களுடன் இம்முறை தேர்தல் நடப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன், வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்களும் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

லெபனானின் முக்கிய அரசியல் மற்றும் போராளிகள் இயக்கமான ஹெஸ்புல்லா, தங்களுக்கு அதிக இடங்களை மக்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி விடும் இதனால், இன்று இரவு அல்லது நாளை யார் வெற்றி என்பது தெரிந்து விடும்.

Related Posts

error: Content is protected !!